என் மலர்

  செய்திகள்

  மழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண், இரட்டை குழந்தைகளுடன் தாய் மீட்பு
  X

  மழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண், இரட்டை குழந்தைகளுடன் தாய் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண், இரட்டை குழந்தைகளுடன் தாய் ஆகியோரை மீட்பு படையினர் விமானம் மூலம் மீட்டனர்.
  அகமதாபாத்:

  குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

  மழை மற்றும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மக்களை மீட்க குஜராத் மீட்புப் படையினர் தீவிரமாக செயல் புரிந்தனர். விமானங்களும் இதில் பயன்படுத்தப்பட்டது.

  இந்நிலையில், ராஜ்கோட் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண், இரட்டைக் குழந்தைகளுடன் தாய் உள்ளிட்ட பலர் மீட்கப்பட்டனர்.

  நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் ஹெலிகாப்டர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நானா மத்ர என்றகிராமத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

  உடனே விமானப் படையினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு வந்தனர். கடந்த 2 நாட்களாக குஜராத்தில் கனமழை கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×