search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி பெண்"

    • தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி புகார் கொடுத்தார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டருகே வசிக்கும் பி.எஸ்சி மயக்கவியல் படித்துள்ள பவித்ரா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கு பவித்ரா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மே மாதம் அவரை காஞ்சிபுரம் அழைத்து சென்று மோகன்ராஜ் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் மோகன்ராஜ் தனது சகோதரி சவுமியாவுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 2 மாதம் முன்பு சொந்த ஊரான வேலகவுண்டனூருக்கு வந்தார். அதன்பின்னர் மனைவி பவித்ராவை அவர் தொடர்பு கொள்ளவில்லை.

    இதையடுத்து கணவரை தேடி 3 மாத கர்ப்பணியான பவித்ரா வேலாக்கவுண்டனூரில் உள்ள மோகன்ராஜின் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் சேர்ந்து பவித்ராவை அவரது கணவரை பார்க்க அனுமதிக்காமல் விரட்டி அனுப்பினார்கள்.

    இதையடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் ஒரு மாதமாக விசாரித்தும் மோகன்ராஜை கண்டுபிடிக்கவில்லை. மேலும் பவித்ராவை கணவர் வீட்டிற்குள் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் மோகன்ராஜின் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனிடையே வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிய மோகன்ராஜ் குடும்பத்தினர் அவர்களது உறவினர்களை அனுப்பி பவித்ராவை அச்சுறுத்தி கடுமையாக தாக்கினர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் மீண்டும் மோகன்ராஜ் வீட்டு முன்பாக அமர்ந்து தொடர்ந்து 35-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.

    கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். 

    • மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    உடுமலை,

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக எரிசினம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, குருமலை ஆகிய மலைவாழ் குடியிருப்புகளில் சுகாதார முகாம் நடைபெற்றது.

    டாக்டர்.பூபதி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு 109 நபர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • இளம்பெண்ணின் உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் படுக்க வைத்து தோளில் சுமந்து சென்றனர்
    • இளம்பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பத்ராத்ரி மாவட்டம், போதனில்லி அடுத்த கோர்கடாபாடு பழங்குடி இன கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண்.

    நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. மலையில் இருந்து கீழே வருவதற்கு சாலை வசதி இல்லை. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் படுக்க வைத்து தோளில் சுமந்து சென்றனர். மலையின் குறுக்கே செல்லும் ஓடையை கடந்து மலை அடிவாரத்திற்கு வந்தனர்.

    பின்னர் அங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திய நாராயணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி வந்தனர்.

    அங்கு கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பத்ராசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இளம்பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆயிசா சுமையா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
    • கர்ப்பிணி பெண் திடீரென இறந்த சம்பவம் குளச்சலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குளச்சல் :

    குளச்சல் மேலத்தெருவை சேர்ந்தவர் சம்மீல் கான் (வயது 32).இவர் குளச்சல் காந்தி சந்திப்பில் கம்ப்யூட்டர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆயிசா சுமையா (26). இவருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. பின்னர் 2-வது முறை கர்ப்பமடைந்த ஆயிசா சுமையாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் அவர் 3-வது முறையாக கர்ப்பமடைந்து 8 மாத கர்ப்பிணியானார். வீட்டிலிருந்த ஆயிசா சுமையா நேற்று திடீரென வாந்தி எடுத்தார். வீட்டினர் உடனே அவரை நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆயிசா சுமையா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆயிசா சுமையாவின் தாயார் நாகர்கோவில் கீழசரக்கல் விளையை சேர்ந்த சகர்பானு குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி. (பொறுப்பு) சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. கர்ப்பிணி பெண் திடீரென இறந்த சம்பவம் குளச்சலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 23-ந் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரும், வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பி.எஸ்.சி. மயக்கவியல் படித்துள்ள பவித்ரா என்பவரும் கடந்த 10 ஆண்டாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த மே 5-ந் தேதியன்று பவித்ராவை அழைத்து சென்ற மோகன்ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் இருவரும் கடந்த 5 மாதமாக சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் மோகன்ராஜ் தனது சகோதரிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் மனைவி பவித்ராவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் போனது.

    இதனால் 3 மாத கர்ப்பிணியான பவித்ரா வேலாக்கவுண்டனுாரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்கவிடாமல் பவித்ராவை தடுத்து விரட்டியுள்ளனர்.

    இதையடுத்து மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி கடந்த 23-ந் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வெயில், மழை என எதற்கும் அஞ்சாமல் 9-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

    மேலும் தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • குடிப்பழக்கத்தை கணவர் கைவிட மறுத்ததால் விபிரீத முடிவு
    • கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள பரசேரி பகத்சிங் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபா லட்சுமி (25). இந்த தம்பதி யினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தற்போது சுபாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதற்காக மருத்து வரிடம் சிகிச்சையும் ஆலோ சனையும் பெற்று வந்தார். அய்யப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், இதனால் வேலைக்கு செல்லாமலும் குடும்பத்தை கவனிக்காம லும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஓணம் விழாவையொட்டி வெளியே சென்ற அய்யப் பன், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை மனைவி சுபாலட்சுமி பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அய்யப்பன் போனை எடுத்துப் பேசாமல் இருந்துள்ளார்.

    இதனால் மன வருத்த மடைந்த சுபாலட்சுமி வீட்டில் நேற்று இரவு தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார். அவரது குழந்தை அழுகுரல் கேட்டு உள்ளே சென்று பார்த்த உறவினர்கள், சுபாலெட்சுமி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சுபாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் குடி பழக்கத்தால் சுபாலட்சுமி தற்கொலை செய்து கொண்டு இருப்பது போலீ சாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்ப்பிணி பெண் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்து கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அதிகாலை நேரத்தில் அவர் தூங்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது வீட்டுக்கு ஷியாம் குமார் (வயது29) என்ற வாலிபர் வந்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் பிரிவு தலைவரான இவர், கர்ப்பிணி பெண் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.

    பின்பு அந்த பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த பெண், போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து வாலிபர் ஷியாம் குமார் மீதுபுலிகேசு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை இன்ஸ்பெக்டர் அஜீப் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    நாகாலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் தும்பா பகுதியில் ஒரு ஒட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிந்த அவரை, மோட்டார் சைக்கிளில் வந்த அனீஷ்(25) என்ற வாலிபர் மானபங்கம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பெண்ணை கீழே தள்ளி தாக்கிவிட்டு வாலிபர் தப்பினார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்து கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணிடம் நடுரோட்டில் அத்துமீற முயன்ற அனீசை கைது செய்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
    • நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 36). யோகா பயிற்சியாளரான சுதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். யோகா கற்றுக்கொண்ட போதிலும் சிறு வயது முதலே சிலம்பம் மீது பற்றுக்கொண்ட அவர் அதில் சாதனை படைக்க விரும்பினார்.

    தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை 1 மணி நேரம் நிறைமாத கர்ப்பிணியான சுதா இடைவிடாது சிலம்பம் சுற்றி அசத்தினார். இவரது இச்சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

    இதுகுறித்து சுதா கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக்கொண்டேன். எனக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி பிரசவத்திற்கான தேதி கொடுத்தனர். நிறைமாத கர்ப்பத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைக்க ஆசைப்பட்டேன். இதற்கு பயிற்சியாளர் பரசுராம், கணவர் வல்லபன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

    இதையடுத்து 1 மணி நேரம் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், மான்கொம்பு ஆகியவற்றை சுழற்றினேன். இந்த சாதனை நோபல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என்றார்.

    • ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி செவ்வந்தி (வயது 25) தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் செவ்வந்தி 2-வதாக கர்ப்பமானார். அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை செங்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து செவ்வந்தியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

    அப்போது செவ்வந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கர்ப்பபையை நீக்க ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர்.

    இதனால் ஆபரேஷன் மூலம் செவ்வந்தியின் கர்ப்பபை அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி செவ்வந்தி பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை கண்டித்து இன்று காலை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர் புறநகர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது . போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது செவ்வந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டதும் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தோம் ஆனால் அவர்கள் ஆபரேஷன் மூலம் சரி செய்து விடலாம் என கூறினர். ஆபரேசனுக்கு பிறகும் செவ்வந்தி பலியாகியுள்ளார்.

    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் 3-வதாக கர்ப்பிணி ஒருவர் பலியாகி உள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

    அவர்களிடம் மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராமநாதபுரத்தில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
    • ஸ்கேன் எடுக்க சென்றபோது அந்த பெண் அணிந்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த முனியசாமி மனைவி சித்ராதேவி(35). கர்ப்பிணியான இவர் கமுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது ரத்தஅழுத்தம் கூடுதலாக இருக்கும் என்று கூறி இரவு தங்க வேண்டும் என்றதால் சித்ராதேவி அங்கேயே தங்கிவிட்டார். ஸ்கேன் எடுக்க சென்றபோது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை.

    இதுகுறித்த புகாரின்பேரில் கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    • சுகந்தியை பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இறந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பெருமாள்கோவில்தெருவை சேர்ந்தவர் மணிவேல் இவரது மனைவி சுகந்தி (35)., இவர்பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இருந்தாள் இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

    • மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி சுவேதா (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சுவேதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் அலுவலக வேலையாக ஐதராபாத் சென்றார்.

    இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டனின் தாய்க்கும் சுவேதாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் மணிகண்டனின் தாய் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மணிகண்டனுக்கு போன் செய்த சுவேதா உன்னுடைய தாய் அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வருகிறார் என கூறினார்.

    அப்போது மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை பூட்டிய சுவேதா பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவியை கொடுத்துவிட்டு விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள காளி கோவில் அருகே சுவேதா கடலில் குதித்தார்.

    அவரை பல இடங்களில் தேடினர். அவரது மாமியார் இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்வேதாவை தேடி வந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் விசாகப்பட்டினம் கடற்கரையில் சுவேதா பிணமாக மிதந்தார்.

    ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சுவேதாவின் அறையில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது ஸ்மைலி பொம்மையுடன் வெள்ளை பேப்பரில் 'எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி' என்று சுவேதா மணிகண்டனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் 'நான் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எனக்கு எப்போதும் தெரியும். உங்களுக்கு உண்மையான வலி இருக்காது.

    எவ்வாறாயினும் உங்கள் எதிர்காலம். புதிய வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட். பேசுவதற்கு நிறைய இருந்தாலும்.. நான் எதுவும் பேசவில்லை.

    உனக்கு எல்லாம் தெரியும். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.

    ரூ.10 லட்சம் வரதட்சணை போதவில்லை எனக்கூறி மாமியார் தொல்லையால் சுவேதா உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தாய் ரமா கதறி அழுதார்.

    இதுகுறித்து போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×