என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்து கர்ப்பிணி பலி- உறவினர்கள் கதறல்
- தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
- கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.






