search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் மீட்பு"

    • இன்று காலை ஷீலாவின் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது.
    • மகள் இறந்தது தெரியாமல் ஜாஸ்மின் மகளின் உடல் அருகே இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    திருவொற்றியூர்:

    மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின்(வயது84). போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலைபார்த்த இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகள் ஷீலா (55). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் தங்கி இருந்தார்.

    ஜாஸ்மின் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை மகள் ஷீலா கவனித்து வந்தார். தந்தையின் பென்சன் பணத்தை வைத்து இருவரும் வாழ்ந்து வந்தனர். கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்து ஷீலா வெளியே வரவில்லை. வீடும் பூட்டி கிடந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ஷீலாவின் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மணலிபுதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ஷீலா இறந்து கிடந்தார்.

    அழுகிய நிலையில் இருந்த அவரது அருகில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய் ஜாஸ்மின் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். இதையடுத்து போலீசார் ஷீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசாதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.

    மகள் இறந்தது தெரியாமல் ஜாஸ்மின் மகளின் உடல் அருகே இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஷீலா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வள்ளி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றார்.
    • மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வடுகபாளையத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம். அவரது மனைவி வள்ளி (வயது 32). அவரது மகன் பிரதீப் (5). கடந்த 4 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பொன்னம்பலம் தனது மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பண்ரு ட்டி போலீசில் பொன்னம்பலம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து வள்ளி மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.குழந்தையுடன் காணாமல் போன வள்ளியை பண்ருட்டி போலீசார் தேடி கண்டுபிடித்து கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்

    ×