என் மலர்

  செய்திகள்

  கேரளா: கற்பழிப்பு வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ. காங்கிரசில் இருந்து நீக்கம்
  X

  கேரளா: கற்பழிப்பு வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ. காங்கிரசில் இருந்து நீக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  திருவனந்தபுரம்:

  திருவனந்தபுரம் மாவட்டம் கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வின்சென்ட். இவரது வீடு திருவனந்தபுரம் பாலராமபுரத்தில் உள்ளது. இவரது வீட்டு அருகே வசிக்கும் 51 வயதான பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  வின்சென்ட் எம்.எல்.ஏ. தனக்கு செல்போனிலும் நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலைக்கு முயன்றதாக அந்த பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார், எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து வின்சென்ட் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு நெய்யாற்றின்கரை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

  கைது செய்யப்பட்ட வின்சென்ட் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ஆளுங்கட்சியினர் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த வின்சென்ட் ‘என் மீது குற்றம் இல்லை என்பதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், என வின்சென்ட் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், எம்.எல்.ஏ. வின்சென்ட் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எம்.ஹசன் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது இதை அவர் தெரிவித்தார்.

  செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது:-
   
  ’எம்.எல்.ஏ. கைதில் அரசியல் உள்நோக்கம் இருக்கக்கூடும் என சந்தேகிக்கின்றோம். இருப்பினும் கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ளதால் அவரை தற்காலிகமாக கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளோம். தன்மீதானா குற்றச்சாட்டை பொய் என அவர் நிருபிக்கும் வரை அவருக்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என நிருபிக்கப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’, என அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×