என் மலர்

  செய்திகள்

  மராட்டிய மாநில எம்.எல்.ஏ.வின் மெய்க்காப்பாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
  X

  மராட்டிய மாநில எம்.எல்.ஏ.வின் மெய்க்காப்பாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மராட்டிய மாநில பா.ஜ.க., எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவரது மெய்க்காப்பாளராக இருந்துவரும் ஒருவர் இன்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  மும்பை:

  மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி மாவட்டத்துக்குட்பட்ட அர்மோரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பவர் கிருஷ்ணா காஜ்பே. பா.ஜ.க.வை சேர்ந்த இவருக்கு இதே தொகுதிக்குட்பட்ட வர்சா பகுதியில் அலுவலகம் ஒன்றுள்ளது.

  இந்நிலையில், கிருஷ்ணா காஜ்பேவின் மெய்க்காப்பாளராக பணியாற்றிவந்த பாஸ்கர் சாவுக்கே(34) என்பவர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இன்று காலை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  அவரது பிரேதத்தை கைப்பற்றி விசாரித்துவரும் போலீசார், உயிரிழந்த நபருக்கும் திருமணமான இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
  Next Story
  ×