என் மலர்
தேர்தல் செய்திகள்
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.
தொகுதிக்குட்பட்ட ஐராவதநல்லூரில் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-
இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல் 23-ந்தேதி வர உள்ள வெற்றிச்செய்தி இப்போது கேட்கிறது.
தேர்தல் முடிவுக்குப்பின் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதற்கு காரணம் இந்த அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டுமென்றால் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
எனவே நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் ஓட்டு மூலம் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #ADMK

கோவில்பட்டி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இதுவரை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும், நடக்க உள்ள தேர்தல்களிலும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அகற்றப்படுவது உறுதி. 23-ந் தேதிக்கு பின்னர் ராகுல் காந்தி பிரதமராக வருவார்.
தமிழகத்தை பொறுத்த வரை மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை எப்படி மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என வாக்களிக்கிறார்களோ அதேபோல் தமிழகத்தில் மோடியை ஆதரித்து கொண்டிருக்கிற பாரதிய ஜனதாவின் பினாமியாக இருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற உணர்வோடு தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் வெற்றியை தருவார்கள்.
காங்கிரசை பொறுத்த வரை தலைவர் ராகுல் காந்தி தேவையான நேரத்தில் தேவையான மாற்றத்தை செய்வார். கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் கொண்டு செல்லப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பெட்டிகளை மாற்றவே துணை முதல்வர் வாரணாசி சென்று, அங்கு பிரதமரை சந்தித்தார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனவே இது குறித்து அங்கு ஏதாவது பேசப்பட்டதா?, அங்கு சென்றதற்கும், பெட்டிகள் மாற்றப்படவும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என இதையெல்லாம் ஆராயப்பட வேண்டிய விஷயம்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு தோல்வி உறுதியானது. அந்த பயத்தில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் செய்ய முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
தேர்தல் ஆணையர், தேர்தல் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, தேர்தல் சட்டம் மற்றும் விதிமுறைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே கண்ணியத்தோடு அந்தப் பணிகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் அவரது வேட்பு மனுவை நிராகரித்தது.
ஆனாலும், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் உறுதியாக இருந்த தேஜ் பகதூர் யாதவ், தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவரது மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். அப்போது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக் காட்டிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தேர்தல் வழக்கு தொடரலாம் என தெரிவித்தார்.
ஆனால், பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதாடிய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தேர்தல் முடிந்தபிறகுதான் தேர்தல் தொடர்பான வழக்குகளை தொடர முடியும் என்றார்.
அப்படியென்றால் தேர்தல் முடிந்தபிறகு தனது கட்சிக்காரர், இந்த வழக்கை மீண்டும் தொடர அனுமதிக்கும்படி பிரசாந்த் பூஷன் கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேஜ் பகதூர் யாதவின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதன்மூலம் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் முயற்சி தோல்வி அடைந்தது. #TejBahadurYadav #Varanasi
சென்னை:
தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 வாக்குச்சாவடிகளும் அடங்கும். இந்த தொகுதியில் கங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத எந்த வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமானால் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தலைமை தேர்தல் முகவர்களுக்கு கண்டிப்பாக தகவல் அளிக்க வேண்டும்.
தகவல் அளிக்கவில்லை என்றால் அது சட்ட விரோதம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஏன் மாவட்ட தேர்தல் நிர்வாகம் கடைபிடிக்க வில்லை. தேர்தலில் போட்டியிட்ட யாரும் மறு வாக்குப்பதிவு கோரிக்கை வைக்காத நிலையில் தன்னிச்சையாக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிப்பது யாருடைய நிர்பந்தத்தால் என்ற கேள்வி எழுகிறது.
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று இத்தனை நாட்களுக்கு பிறகு மறுவாக்குப்பதிவு என்பது இதுவரை இல்லாத நடைமுறை என்பது அனைவரும் அறிந்ததே! மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் அதிகார மையத்தில் உள்ளவர்களின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஆக உள்நோக்கத்தோடு செயல்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #elangovan #congress #electioncommission
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மதியம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அது போல கடலூர், பூந்தமல்லியில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று இந்த 10 இடங்களிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கிடையே 46 இடங்களில் வாக்குப்பதிவின்போது 3 விதமான தவறுகள் நடந்ததாக தெரிய வந்தது.
1. மாதிரி வாக்குப்பதிவு நடத்தும்போது ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டு விட்டனர்.
2. சில தொகுதிகளில் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டுகளை அப்புறப்படுத்தவில்லை.
3. மின்னணு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளையும் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டையும் அகற்றாமல் தவறு செய்து இருந்தனர்.
இதை மேற்கோள் காட்டி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி இருந்தோம். அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இந்த 46 இடங்களில் 3 இடங்களில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று மாலை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 13 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மீதமுள்ள 43 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட மாட்டாது. மறு வாக்குப்பதிவு நடக்கும் 13 இடங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஒன்று பாராளுமன்றத்துக்கும் மற்றொன்று சட்டசபை இடைத்தேர்தலுக்கும்.
பண்ருட்டி, ஈரோடு ஆகிய 2 இடங்களில் நடைபெறும் மறுவாக்குப்பதிவில் பாராளுமன்ற வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.
கோவையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை ரகசியமாக நாங்கள் தேனிக்கும், ஈரோடுக்கும் அனுப்பி வைக்கவில்லை. அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் சொல்லி விட்டுதான் மின்னணு எந்திரங்களையும் விவி பேட் எந்திரங்களையும் அனுப்பி வைத்தோம்.
தேர்தல் கமிஷனின் அனுமதியின் பேரில்தான் இந்த எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேர்தலில் நடந்த தவறுக்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது இனிமேல்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது மறுவாக்குப் பதிவு நடத்துவதுதான் எங்களது முக்கிய பணியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் விவரத்தையும் இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த 13 வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி கன்னப்பாளையம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் (பூத் நம்பர் 195) 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 1117 ஓட்டு உள்ளது.
பூந்தமல்லி தொகுதியில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்ததால் இங்கு 19-ந் தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் 2 ஓட்டு போடுவார்கள். அப்போது நடு விரலில் “மை” வைக்கப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் உள்ள வாக்காளர்கள் தர்மபுரி எம்.பி. தொகுதிக்கு ஒரு ஓட் டும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு ஓட்டும் பதிவு செய்ய வேண்டும்.
தர்மபுரி எம்.பி. தொகுதியில் அடங்கிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் வாக்குச்சாவடி எண்.192 முதல் 195 வரை உள்ள 4 வாக்குச்சாடிகளிலும், டி.அய்யம்பட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண். 181 மற்றும் 182 ஆகிய 2 வாக்குச்சாவடிகளிலும், கேத்து ரெட்டிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண்.183 மற்றும் 186 ஆகிய 2 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியில் இருந்து ஒப்புகை சீட்டை அகற்றாமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இந்த மையத்தில் 1405 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 702 பேரும், பெண்கள் 703 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 450 பேர், பெண்கள் 454 பேர் என 904 பேர் வாக்களித்திருந்தனர்.
இதே போல ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமலும், ஒப்புகை சீட்டை அகற்றாமலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் என 1255 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 523 ஆண்கள், 500 பெண்கள் என மொத்தம் 1023 பேர் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த இரு வாக்குச்சாவடிகளையும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கும் சேர்த்து வாக்காளர்கள் 2 ஓட்டுகள் போட வேண்டும்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதி காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் என்ற ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்கு சாவடி எண். 248ல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இந்த ஓட்டு மையத்தில் தேர்தலுக்கு முன் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மாதிரி ஓட்டு 50 சேர்ந்து பதிவாகி உள்ளது. இதனால் அந்த ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கடலூர் பாராளுமன்ற தொகுதி பண்ருட்டி திருவதிகை நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் உள்ள 210-ம் எண் வாக்குச் சாவடியில் கடந்த 18-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சின்னத்தின் பட்டன் இல்லை என்பதை வாக்காளர் ஒருவர் கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து 210-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கலெக்டர் அன்புச்செல்வன் அறிக்கை அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள 210-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 2-ம் கட்டமாக கடந்த 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றபோது காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகர் வாக்குச்சாவடி எண் 10-ல் மாதிரி வாக்குப்பதிவுகளை வாக்குப்பதிவு அதிகாரி நீக்காமல் வாக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இதற்கு முன்னாடி தமிழகத்தை பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளது. யார் நல்லாட்சி தந்து, நல்ல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார்கள், யார் மக்களுக்கு தேவையான, பல்நோக்கு திட்டங்களை தந்தார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
எதிர்கட்சியினர் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போய் விடும். ஆட்சி கலைந்து விடும் என்று கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள்,
அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு சிறப்பு இருக்கிறது. 28 ஆண்டுகளாக, பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆதரவோடு ஆளுகின்ற ஒரே கட்சியாக அ.தி.மு.க. திகழ்கிறது.
தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2011 வரைக்கும் எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள், எந்த திட்டத்தை முடித்தார்கள் என்று வாக்கு சேகரிக்க வரும் தி.மு.க.காரர்களிடம் கேளுங்கள்.
ஜெயலலிதா ஆட்சியேற்றவுடன் ஒரே வருடத்தில் படிப்படியாக மின்வெட்டினை குறைத்து, மின்வெட்டினை இல்லாத மாநிலமாக உருவாக்கி, தற்போது உபரி மாநிலமாக, அண்டை மாநிலங்களுக்கு 3000 மெகா வாட் மின்சாரத்தினை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

முடியாது, ஏனென்றால் மக்கள் அனைவரும் திமுக கட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். தி.மு.க. அராஜகத்தில் ஈடுபடுவதால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நீங்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #ADMK #DMK
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 12,19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மம்தா பானர்ஜி பொது மேடையிலேயே மக்களுக்கு முன்பாக இந்த நாட்டை ஆளும் என்னை பிரதமராக ஏற்க முடியாது என கூறினார். ஆனால் பாகிஸ்தான் பிரதமரை, பிரதமர் என அழைப்பதையே பெருமிதமாக கருதுகிறார். தேர்தலுக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியலமைப்பை அவமதித்துள்ளார்.
பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்திய பானி புயல் குறித்து மாநிலத்தின் அனைத்து துறை அதிகாரிகள் , அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்பதற்காக மமதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை. என்னை மீண்டும் தொடர்பு கொள்ள மம்தா முயற்சி கூட செய்யவில்லை.
மேற்கு வங்காளம் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எதுவும் செய்ய மம்தா தயாராக இல்லை. ஒரு கட்சியின் தலைவராகவும், முதல் மந்திரியாகவும் முக்கிய பொறுப்பு வகிக்கும் மம்தா என்னை பற்றி தரகுறைவாகவும் பேசி வருகிறார். இப்போது நான் இந்த வார்த்தைகளை ஏற்க பழகி கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #MamthaBanerjee
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மறு வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Repoll
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். நாகமலை புதுகோட்டையில் அவர் திரண்டிருந்த மக்களிடையே பேசியதாவது:-
தேர்தல் முடிவு வந்த பின் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் தி.மு.க.வின் படை வீடாக மாறும். புதுச்சேரி உள்பட 39 பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்.
தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனை மாநில அரசும் கண்டு கொள்வதில்லை. தமிழ் மொழியே தெரியாத ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் மத்திய அரசு பணிகளிலும், ரெயில்வேயிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு தேர்வுகளில் கஷ்டப்பட்டு படிக்கும் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இதனை தட்டிக் கேட்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தைரியம் இல்லை.
பா.ஜனதா தேர்தலில் தோல்வி அடையும். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மோடிக்கு காவடி தூக்கி வருகிறது.
தற்போது உள்ள ஆட்சி குட்கா உள்ளிட்ட ஊழல்களில் சிக்கியுள்ளது. எனவே மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #Vaiko
சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் கள்ளப்பாளையம், சின்னக்குயிலி, இடையர்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, செஞ்சேரிமலை, ஜல்லிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பேசினார். அப்போது டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற துரோக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கடமை வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது. அதற்கு காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த ஆட்சியை தொடர்ந்து நடத்திட வேண்டி சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கினார். ஆனால் இந்த கட்சி எக்கேடு கெட்டு போனால் என்ன என்று சசிகலா நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை ஒரு சகோதரராக நினைத்து சசிகலா ஆட்சியை விட்டு சென்றார். ஆனால் அவர் துரோகம் செய்து விட்டார். அவர் செய்தது சரியா என்பதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் தான் இந்த தேர்தல் மூலம் பதில் அளிக்க வேண்டும்.
மோடியின் ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா போராடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார். மோடிக்கு பயந்து கொண்டு விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை கொண்டு வருகிறார்கள். வியாபாரிகளை பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா வரவிடவில்லை. ஆனால் எடப்பாடி அதை ஆதரித்தார். இது ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் இரட்டை இலையை காட்டி ஏமாற்றுகிறார். இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளுக்குத் தான் வாக்களிப்போம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்.

எங்களை வெற்றி பெற செய்தால் சூலூர் தொகுதியில் வேளாண் உதவி மையம் அமைக்கப்படும். விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பரம்பிக்குளம்-ஆழியாறு மூலம் இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 60 வயதான விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பலன் அளிக்கும் வகையில் சிறப்பான மக்களாட்சியை அமைத்து தர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம். உங்களது வெற்றி வேட்பாளர் சுகுமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.
முன்னதாக கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி-புவனேஸ்வரி தம்பதியின் பெண் குழந்தைக்கு அகல்யா என்று டி.டி.வி. தினகரன் பெயர் சூட்டினார். #EdappadiPalanisamy #TTVDinakaran






