search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா என்னை பிரதமராக ஏற்காததால் அரசியலமைப்பை அவமதித்துள்ளார் -  மோடி தாக்கு
    X

    மம்தா என்னை பிரதமராக ஏற்காததால் அரசியலமைப்பை அவமதித்துள்ளார் - மோடி தாக்கு

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி என்னை பிரதமராக ஏற்காததால் அரசியலமைப்பை அவமதித்துள்ளார் என தாக்கி பேசினார். #PMModi #MamthaBanerjee
    பங்குரா:

    மேற்கு வங்காளம்  மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 12,19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் பங்குரா பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:



    மம்தா பானர்ஜி பொது மேடையிலேயே மக்களுக்கு  முன்பாக இந்த நாட்டை ஆளும் என்னை பிரதமராக ஏற்க முடியாது என கூறினார். ஆனால் பாகிஸ்தான் பிரதமரை, பிரதமர் என அழைப்பதையே பெருமிதமாக கருதுகிறார். தேர்தலுக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியலமைப்பை அவமதித்துள்ளார்.  

    பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்திய பானி புயல் குறித்து மாநிலத்தின் அனைத்து துறை அதிகாரிகள் , அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்பதற்காக மமதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை. என்னை மீண்டும் தொடர்பு கொள்ள மம்தா முயற்சி கூட செய்யவில்லை.

    மேற்கு  வங்காளம் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எதுவும் செய்ய மம்தா தயாராக இல்லை.  ஒரு கட்சியின் தலைவராகவும், முதல் மந்திரியாகவும் முக்கிய பொறுப்பு வகிக்கும் மம்தா என்னை பற்றி தரகுறைவாகவும் பேசி வருகிறார். இப்போது நான் இந்த வார்த்தைகளை ஏற்க பழகி கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #MamthaBanerjee  

    Next Story
    ×