search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கல்வி தான் நாளைய சமுதாயத்தை உருவாக்கும்- சார்பு நீதிபதி பேச்சு
    X

    விழிப்புணர்வு பிரசுரத்தை மாணவிகளிடம் சார்பு நீதிபதி இந்திராகாந்தி வழங்கினார்.

    பெண் கல்வி தான் நாளைய சமுதாயத்தை உருவாக்கும்- சார்பு நீதிபதி பேச்சு

    • பள்ளி குழந்தைகள் செல்போன் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
    • பெண்கள் தங்களை பாதுகாப்பதற்கு தற்காப்பிற்கு ஏதுவான திறன்களை வளர்த்து கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசி ன்தா மார்டின் வழிகாட்டு தலின் படி பள்ளி மாணவிகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகா மானது தஞ்சாவூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா ளரும் சார்பு நீதிபதியுமான இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் எந்தவொரு பிரச்ச னைகளையும் ஆசிரியர்களிடமோ அல்லது பெற்றோ ர்களிடமோ தயங்காமல் கூற வேண்டும்.

    பள்ளி குழந்தைகள் செல்போன் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செல்போ ன்களின் மூலமாக தான் பல பிரச்சனைகள் வருகின்றன.

    எனவே பெண்களுக்கு செல்போன்கள் தான் முதல் எதிரி. பெண் கல்விதான் நாளைய சமுதாயத்தை உருவாக்கும். பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

    பெண்கள் தங்களை பாதுகாப்பதற்கு தற்காப்பிற்கு ஏதுவான திறன்களை வளர்த்து கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா, உடற்கல்வி இயக்குனர் தேன்மதி, வழக்கறிஞர் சாந்தா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்டத் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×