search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ராஜகோபாலசாமி கோவிலில் நாளை சிவேந்திரசுவாமிக்கு  திருக்கல்யாண உற்சவம்
    X

    தஞ்சை ராஜகோபாலசாமி கோவிலில் நாளை சிவேந்திரசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

    • தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.
    • 18-ம் ஆண்டு பார்வதிதேவி சமேத சிவேந்திர சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இங்கு மூலவராக விஜயவல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் திகழ்கிறார்.

    இங்கு பார்வதி தேவி மற்றும் கங்கா தேவி சமேதராக சிவேந்திரர் காட்சி தருகிறார்.

    இங்குள்ள பகுளாமுகி காளியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தஞ்சாவூரில் மிகவும் உயரமான விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் சிவ துர்க்கை அம்மன் இங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் நாளை ( ஞாயிற்றுகிழமை ) 18-ம் ஆண்டு பார்வதிதேவி சமேத சிவேந்திர சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    முன்னதாக மாலை 4 மணிக்கு நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து கல்யாண சீர்வரிசைகள் பக்தர்கள் எடுத்து வருகின்றனர்.

    இரவு 7.30 மணிக்கு பார்வதிதேவி சமேத சிவேந்திரருக்கு மாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இந்த விழாவிற்காக ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×