என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வாடிக்கையாகி வரும் திருட்டு சம்பவங்கள்-போலீசார் அலட்சியம் காட்டுவதாக புகார்
  X

  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வாடிக்கையாகி வரும் திருட்டு சம்பவங்கள்-போலீசார் அலட்சியம் காட்டுவதாக புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை சில நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து ஐகிரவுண்ட் போலீசில் ஒப்படைக்கின்றனர்.
  • அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஏழை எளியவர்களின் நலன் கருதி ஆஸ்பத்திரியில் கூடுதலாக போலீசாரை பணியில் நியமிக்க வேண்டும்.

  நெல்லை:

  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  திருட்டு

  இது தவிர ஏராளமான புற நோயாளிகளும் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவியாக அவர்களது உறவினர்களும் வந்து செல்கின்றனர்.

  இதனால் எப்போதும் அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்படும். நோயாளிகளின் உறவினர்கள் அவர்களது அறைகளில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்பதால் வளாகத்தில் உள்ள மரத்தடிகளில் தங்கி இருப்பார்கள். அவர்களிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விடுகின்றனர்.

  புகார்

  இந்த சம்பவம் தினந்தோறும் வாடிக்கையாகிவிட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை சில நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து ஐகிரவுண்ட் போலீசில் ஒப்படைக்கின்றனர். ஆனாலும் போலீசார் அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

  அலட்சியம்

  ஒரு சில நேரங்களில் வயதானவர்களிடம் மர்ம நபர்கள் திருடி சென்றாலும் போலீசார் உடனடியாக அங்கு சென்று குறைகளை கேட்காமல் அலட்சியமாக போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறி தாமதப்படுத்துகின்றனர். இதனால் அங்கு செல்ல முடியாமல் பணம் போனாலும் பரவாயில்லை என்று பெரும்பாலானோர் விட்டு விடுகின்றனர்.

  இதன் காரணமாக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும் அதே தவறை செய்வதாக கூறப்படுகிறது.

  புறக்காவல் நிலையம்

  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்ட செல்போன்களும் பணம் மற்றும் நகைகளும் திருட்டு போய் வருகிறது.

  இது தொடர்பாக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அவர்கள் அலட்சியமாகவே புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.

  இதனால் அங்கு பணியில் இருக்கும் போலீசார் அடிக்கடி வளாகத்தில் சுற்றி வருவார்கள். ஆனால் தற்போது ஒரு புறக்காவல் நிலையம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரியில் திருட்டு சம்பவங்கள் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

  எனவே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஏழை எளியவர்களின் நலன் கருதி ஆஸ்பத்திரியில் கூடுதலாக போலீசாரை பணியில் நியமிக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

  Next Story
  ×