என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெரியநாயக்கன்பாளையத்தில் வாலிபர் தற்கொலை
  X

  பெரியநாயக்கன்பாளையத்தில் வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த அத்திப்பாளையம் பகுதியில் தனது அண்ணனுடன் தங்கி மில்லில் வேலை செய்து வந்தார்.
  • ஹரிராம் நாயக் தான் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பாமல் இருந்து வந்தார்.

  கோவை:

  ஒடிசாவை சேர்ந்தவர் ஹரிராம் நாயக் (வயது21). இவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த அத்திப்பாளையம் பகுதியில் தனது அண்ணனுடன் தங்கி மில்லில் வேலை செய்து வந்தார்.

  இந்த நிலையில் ஹரிராம் நாயக் தான் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பாமல் இருந்து வந்தார். இதனால் அவரது தந்தை அவருக்கு போன் செய்து சம்பள பணத்தை அனுப்புமாறு கூறினார். சம்பள பணத்தை கேட்டதால் ஹரிராம் நாயக் மன வேதனை அடைந்தார்.

  சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறைக்கு வந்த அவரது அண்ணன், தம்பி ஹரிராம் நாயக் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பள பணத்தை தந்தை கேட்டதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×