search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொத்த விற்பனையில் கிலோ ரூ.80- தக்காளி விலை மேலும் ரூ.10 குறைந்தது
    X

    மொத்த விற்பனையில் கிலோ ரூ.80- தக்காளி விலை மேலும் ரூ.10 குறைந்தது

    • உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.
    • கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக ஏறுமுகமாகவே இருந்தது. கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த நிலையில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வழக்கமாக கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 33 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் பாதிப்பு இல்லாததால் வரும் நாட்களில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்போது தக்காளி விலை மேலும் சரிந்து பழைய நிலைக்கு வரும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைந்து இருந்தாலும் வெளிஇடங்களில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளி விலை குறையவில்லை. கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    Next Story
    ×