search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பஞ்சத்திற்கு திருடர்கள்...தி.மு.க. பரம்பரை திருடர்கள்... சீமான்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க. பஞ்சத்திற்கு திருடர்கள்...தி.மு.க. பரம்பரை திருடர்கள்... சீமான்

    • இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று சொல்லும் பா.ஜனதா அவர்களுடைய வரி வேண்டாம் என்று சொல்லுமா?.
    • பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிட தயாரா? உள்ளாட்சி தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவு செய்த கட்சி பா ஜனதா.

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நெல்லை வந்தார்.

    நீதிமன்றம் எதிரே உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டில் பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஜோதியை ஏற்றி வைத்தார்.

    அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் தேசிய அரசியலை விதைத்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறோம். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜனதா பேசி நாட்டைத் துண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று சொல்லும் பா.ஜனதா அவர்களுடைய வரி வேண்டாம் என்று சொல்லுமா?.

    இலங்கைக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் எதற்காக கொடுக்க வேண்டும். அவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்களா? 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கச்சதீவை மீட்க தி.மு.க.விற்கு சரியான நாள் வரவில்லையா?

    இங்கு தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தான் பகை. இதற்கு இடையில் திராவிடம் என்பது போலி.

    பா. ஜனதா மாநில தலைவர் ஊழல் பட்டியலை வெளியிடுகிறார். ஊழலைப் பற்றி பேசுபவர், எதற்காக ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைத்து உள்ளார். ஊழல் கட்சிகளின் தலைவர் சிலையை திறந்து வைப்பதற்கு ஏன் துணை குடியரசுத் தலைவர் வரவேண்டும்?

    பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிட தயாரா? உள்ளாட்சி தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவு செய்த கட்சி பா ஜனதா.

    அ.தி.மு.க. பஞ்சத்திற்கு திருடர்கள். தி.மு.க. பரம்பரை திருடர்கள். ஆதினங்களை பல்லக்கில் வைத்து தூக்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அது காலம் காலமாக உள்ள சம்பிரதாயம் என்பதால் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப நவீன எந்திரங்கள் கொண்டு இழுக்கலாம். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×