search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?- மக்கள் நீதி மய்யம் கேள்வி
    X

    தமிழகத்தில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?- மக்கள் நீதி மய்யம் கேள்வி

    • பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதை கைவிட வேண்டும்.
    • மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியின் போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது தி.மு.க. இப்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், கருப்பு உடையணிந்துப் போராட்டம் நடத்தினார். ஆனால், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. திமுக ஆட்சியிலும் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவது தொடர்கிறது.

    கடந்த சில மாதங்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

    டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது.

    எனவே, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதை கைவிட வேண்டும். மேலும், ஏற்கனவே மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×