என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை
  X

  6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்ப பிரச்சினையில் பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  முத்துப்பேட்டை:

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால்(வயது 42) கூலிதொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (35). இவர்களுக்கு 6 வயதில் சுபத்திராதேவி என்ற குழந்தை உள்ளது. இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இந்நிலையில் கோபால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக ஒருமுறை கோபால் மீது வீரம்மாள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

  இந்த சூழ்நிலையில் நேற்றிரவு மீண்டும் குடித்துவிட்டு வந்து என்னை பற்றி எப்படி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என கூறி வீரம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி வீரம்மாளை தாக்கினார். இதனால் வீரம்மாள் மகளை வீட்டில் விட்டு விட்டு அருகே உள்ள பள்ளிகூடத்தில் இரவு தங்கினார்.

  இந்த சம்பவத்தால் மனமுடைந்த கோபால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி மகள் சுபத்திராதேவிக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். இதில் வாயில் நுரைதள்ளியடி இருவரும் மயங்கி கிடந்தனர்.

  இன்று காலை வீட்டுக்கு வந்த வீரம்மாள், கணவர், மகள் இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுபத்திராதேவி பரிதாபமாக இறந்தார். கோபாலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  குடும்ப பிரச்சினையில் பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×