search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை, சங்கரன்கோவிலில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலகங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    சென்னை, சங்கரன்கோவிலில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலகங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    திருப்போரூரில் 1 கோடியே 11 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவிலும், சின்ன சேலத்தில் 1 கோடியே 4 ஆயிரத்து 606 ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ரூ.2 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை (வடக்கு) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 2 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    ஆனைமலையில் 4 கோடியே 25 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சியில் 3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், கல்வராயன்மலையில் 4 கோடியே 25 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 2 கோடியே 75 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஏரலில் 3 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 30 கோடியே 73 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் 1 கோடியே 11 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் 1 கோடியே 4 ஆயிரத்து 606 ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    Next Story
    ×