search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் பக்தர்கள் தவிப்பு
    X

    தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் பக்தர்கள் தவிப்பு

    • தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் பக்தர்கள் தவித்து வருகின்றனறர்.
    • உடனடியாக விசாரிக்கப்பட்டு விதி மீறி அங்கு கடைகள் அமைத்து இருந்தால், வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தால் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்றார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா ஜூன் 1-ந்தேதி தொடங்கி, 30-ந்தேதி முடிவடைகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். இதனால் தர்கா பகுதி மக்கள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது.

    இந்த நிலையில் தர்காவின் முன்புறம் அமைந்துள்ள அரசால் தடைசெய்யப்பட்ட நிலமான சர்வே எண்.502 மற்றும் 504-ல், வாடகை கார், வேன், ஆட்டோக்கள், தண்ணீர் லாரிகள் மற்றும் வியாபார கடைகள் ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

    திருவிழாக்காலங்களில் கூடும் மக்களுக்கு நிற்கக்கூட இடமில்லாமல், குறிப்பிட்ட இடத்தில் இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளது. மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றியும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் கூறுகையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விசாரிக்கப்பட்டு விதி மீறி அங்கு கடைகள் அமைத்து இருந்தால், வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தால் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    Next Story
    ×