search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவில்களில் திரளான பெண்கள் வழிபாடு
    X

    தட்டான் தோப்பு பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர்.


    அம்மன் கோவில்களில் திரளான பெண்கள் வழிபாடு

    • அம்மன் கோவில்களில் திரளான பெண்கள் வழிபாடு செய்தனர்.
    • இதில் பங்கேற்ற அனைவருக்கும் கூழ், பொங்கல், தாம்பூலப்பை பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    வரலட்சுமி விரதம், 3-வது ஆடிவெள்ளியை முன்னிட்டு ராமநாதபுரம் அல்லி கண்மாய் பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிேஷகம் செய்து ஊஞ்சல் அலங்கா ரத்தில் அருள் பாலித்தார்.

    வெட்டுடையாள் காளியம்மன் கோவில், சேதுபதி நகர் மல்லம்மாள் காளியம்மன் கோவிலில் அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சுமங்கலி பூஜை செய்து பெண் பக்தர்களுக்கு வளையல், ஜாக்கெட், மஞ்சள் கயிறு, கிழங்கு, குங்குமம், சந்தனம் வழங்கினர்.

    யானைக்கல் வீதி பிள்ளை காளியம்மன், ஓம்சக்திநகர் ஒத்த பனை மரத்து காளியம்மன் கோவில், வடக்குநகர் தேவி கருமாரியம்மன் கோவில், அண்ணாநகர் சந்தனமாரியம்மன் கோவில், ராமேசுவரம் ரோடு ரெயில்வே பாலம் வெட்டுடையார் காளி யம்மன் கோவில்களில் வரலட்சுமி விரதம், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

    கூழ்காய்ச்சியும், வேப்பிலை, மஞ்சள் பால் அபிேஷகம் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், ராமநாதபுரம் பெரியமாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மாகார்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் பத்ர காளியம்மன் நாராயணசாமி கோவில் உள்ளது. இங்கு வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 600-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது.

    அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார். கோவில் வளாகத்தில் சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளி, உலக நன்மைக்கான கூட்டு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் கூழ், பொங்கல், தாம்பூலப்பை பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

    கீழக்கரை அருகே கோகுலம் நகரில் உள்ள பாமா ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணர் கோவி லில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனை நடந்தது. கீழக்கரை மறவர் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் மூலவர் மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கூழ் காய்ச்சப்பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    Next Story
    ×