என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவாடானை தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
  X

  திருவாடானை தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவாடானை தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • அதனைத் தொடர்ந்து திருவாடானை அருகே அச்சங்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டிடத்தை அரசு முதன்மை செயலாளர் திறந்து வைத்தார்.

  தொண்டி

  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் ஆய்வு நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.

  கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், கோட்டாட்சியர் சேக் மன்சூர், வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், துணை வட்டாட்சியர்கள் ஜஸ்டின் பெர்னான்டோ, பாலமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி, தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா, வட்ட வழங்கல் அலுவலர் அமர்நாத், வருவாய் ஆய்வாளர் அமுதன் உட்பட வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அலுவலக ஆய்வு, நில அளவை ஆய்வு, இ-சேவை ஆய்வுகள் செய்யப்பட்டன.

  தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவாடானை அருகே அச்சங்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டிடத்தை அரசு முதன்மை செயலாளர் திறந்து வைத்தார்.

  Next Story
  ×