என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது.
    • மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை எம்.பி. கார்த்திசிதம்பரம் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு மறைமுகமாக அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறதோ என்று சந்தேகம் உள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அ.தி.மு.க. கூட்டணி கணிசமான வாக்குகளை அந்த தொகுதியில் பெற்றுள்ளது.

    ஒரு பெரிய அரசியல் கட்சி தேர்தல் நடத்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம். டெல்லியில் இருந்து அழுத்தம் அளித்து பா.ஜ.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியதால் தேர்தலை புறக்கணித்து உள்ளனரா என்ற சந்தேகம் உள்ளது.

    தமிழகத்தில் ஒத்தை சீட்டு கூட வாங்கலையா என்று கையை உயர்த்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்டதாக நான் கருதுகிறேன். இந்தியா கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கு பெற்று வாதாடுவோம்.

    ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இந்து கோவில்களை அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக பதவி ஏற்று உள்ளவர்கள் அறியாமையில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

    இந்து கோவில்கள், அறநிலையத்துறை அரசாங்கத்திடம் தான் இருக்க வேண்டும் . நீட் தேர்வில் வெளிப்படை தன்மை என்பது கிடையாது. தேர்வு நடந்த முறையில் வைத்து நான் சொல்கிறேன். எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்

    மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தேவையில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. சுமூகமாகத்தான் உள்ளது. கோயம்புத்தூரில் கூட நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    நாங்கள் இருவரும் பரஸ்பரமாக தான் உள்ளோம். எந்தவிதமான பனிப் போரும் கிடையாது. வரும் காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுக்கோட்டையில் தவெகவின் அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார்.
    • புதுக்கோட்டையின் கட்சி நிர்வாகிகளின் பெயரை அவர் படித்து காட்டினார்.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது.

    இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்தார்.

    இதை தொடர்ந்து விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடுவிதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் தவெகவின் அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். அப்போது, அந்நிகழ்விற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகளின் பெயரை அவர் படித்து காட்டினார்.

    அப்போது விஜய் என்ற பெயர் கொண்ட நிர்வாகிகளின் பெயரை விஜய் என சொல்லாமல் 'தளபதி பெயர் உடையவர்களே' என புஸ்ஸி ஆனந்த் படித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்பது மகத்தான வெற்றி.
    • தமிழ்நாட்டிற்கு மத்தியில் மந்திரிகள் ஒதுக்கப்பட்டால் வரவேற்போம்,

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் நடைபெற்ற பாலாலயம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முத்துராஜா எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் கோவில் வளாகத்தில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளார்கள். இன்று கூட்டணியின் தயவு இல்லாமல் அவர்கள் ஆட்சியை நடத்த முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நிச்சயமாக இது நிலைத்திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுனர்களுடைய கருத்தாக அமைந்திருக்கிறது.

    இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிற வெற்றி என்பது மகத்தான வெற்றி. எங்களது கூட்டணி சிறப்பாக எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் இந்தியா கூட்டணி இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அது மகிழ்ச்சியான ஒன்றுதான்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40-க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து நிறைவேற்றி உள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர். ஆனால் அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அ.தி.மு.க.வை பற்றி விமர்சிக்கவில்லை.

    ஆனால் தி.மு.க.வை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் தி.மு.க.வை விமர்சித்தால் எங்களுக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க தகுதி உள்ளது. அ.தி.மு.க.வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது? என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    தமிழிசை சொன்ன குற்றச்சாட்டை தான் நாங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளோம். குற்றவாளிகளை பா.ஜ.க. சேர்த்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். அதற்கு இன்று தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள வாக்கு வங்கி பா.ம.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்கு வங்கி தானே தவிர. பா.ஜ.க. தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை.

    எங்களுடைய வாக்கு வங்கி என்றைக்குமே குறைவாகாது. எங்களை பொறுத்தவரை வாக்குகள் சிதறி இருக்கின்றனவே தவிர, நிச்சயமாக தி.மு.க. கடந்த முறை வாங்கிய வாக்குகளை வாங்கி உள்ளோம். கடந்த முறை 24 இடங்களில் நின்றோம். இந்த முறை 22 இடங்களில் நின்றுள்ளோம். அதனால் அந்த சதவீதத்தை கணக்கிட்டுள்ளனர். அதனால் எங்களது கூட்டணி எப்போதும் பெற்றுள்ள வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

    தமிழ்நாட்டிற்கு மத்தியில் மந்திரிகள் ஒதுக்கப்பட்டால் வரவேற்போம். அப்படி வரக்கூடியவர்களால் தமிழ்நாட்டிற்கு நல்லது கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தோடு வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக கோயில்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்
    • அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார்.

    அங்கிருந்து வாரணாசியில் இருந்து திருச்சி வந்த அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் வந்தடைந்தார்.

    மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர்.

    அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.

    அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக ராஜராஜேஸ்வரி சத்யகிரீஸ்வரர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.

    இதைதொடர்ந்து, அமித்ஷா நாளை காலை ஏழுமலையானை வழிபடுவதற்காக திருப்பதி செல்கிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் கோயில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கோவில்கள் பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் கொண்டுள்ளன.
    • . கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயமும், சத்திய மூர்த்திப் பெருமாள் கோவிலும் மிகவும் புகழ் பெற்ற தலங்களாகும். இரண்டுமே பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. இந்த கோவில்கள் பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் கொண்டுள்ளன.

    உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாளாக சத்திய மூர்த்தி பெருமாள் இங்கு தான் வீற்றிருக்கிறார். முகத்தை ஒரு சாளரம் வழியாகவும், பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கி உள்ளனர்.

    இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்ட பைரவர் தலம் இது ஒன்றே ஆகும். கோவில் அருகே பாம்பாறு செகிறது. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. சகல தோஷ பரிகார தளமாகவும் இது விளங்குகிறது.

    கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவர். சிவபெருமான் பைரவ வடிவம் கொண்டதாக ஆகமங்கள் சொல்கின்றன. இந்த கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும். ராமநாதபுரச் சீமையை ஆண்டகிழவன் சேதுபதியால் இங்குள்ள கோட்டை கட்டப்பட்ட போது கோட்டையின் தென்புற பிரதான வாயிலில் ஸ்ரீசக்தி விநாயகரும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் ஸ்ரீ கோட்டை பைரவர் கோவில் அமைக்கப்பட்டது.

    இக்கோவில் மத்திய தொல்லியல் ஆய்வித்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை திருக்கோவில்கள் நிர்வாக அதிகாரி, உதவி ஆணையராலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவரைக்கு அபிஷேகம், வடமாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும்.

    பிதூர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம் பழமாலை சூட்டி எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதூர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

    பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனகாப்பு வடமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளிமாலை நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். எல்லா பரிகாரங்களும் நெயதீபமும், மிளகு தீபமும் பொதுவானது. தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால் நன்மை கோடி வந்து சேரும்.

    இன்று தேய்பிறை அஷ்டமிநாளில் இங்கு மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் இருந்து மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.

    பின்னர் அவர் மாலை 3.25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருமயம் காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் மாலை 5.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5.25 மணி அளவில் தனி விமானம் மூலம் திருப்பதிக்கு செல்கிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டை கால பைரவர் கோவில் மற்றும் சத்தியகிரீசுவரர் கோவிலில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • கோவையில் சில நாட்கள் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்ட ஜான் தேவ சகாயம் இன்று கோவையில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பினார்.
    • தகவலின் பேரில் வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதியை சேர்ந்தவர் ஜான் தேவ சகாயம். இவர் டி.இ.எல்.சி. சபையில் போதகராக உள்ளார். இவரின் மனைவி எஸ்தர் கலான். இவர் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் போதகர் ஜான் தேவசகாயம் மருத்துவ சிகிச்சைக்காக கோவை சென்றுள்ளார். அவருடன் மனைவி எஸ்தர் கலான் உள்ளிட்ட குடும்பத்தினரும் சென்றுள்ளனர். இதனால் புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    கோவையில் சில நாட்கள் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்ட ஜான் தேவ சகாயம் இன்று கோவையில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பினார். வீட்டுக்கு திரும்பிய அவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பதறி அடித்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 80 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர்.

    கைரேகை நிபுணர்கள் பீரோவில் இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கணேஷ் நகர் போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை நகரின் பிரதான கணேஷ் நகர் பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை:

    திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 44). இவர், இலுப்பூரில் வசித்து வந்தார்.

    இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினரான சேட்டு மகன் பாஸ்கர் (23) என்பவருடன் நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  இலுப்பூர் அடுத்த குரும்பட்டியில் வசித்து வரும் கிருஷ்ண மூர்த்தி என்பவர் வீட்டிற்கு இளங்கோவன் வந்துள்ளார்.

    பின்னர் அங்குள்ள கட்டிலில் படுத்துள்ளார். அப்போது அங்கு வந்த பாஸ்கர், இளங்கோவனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளங்கோவனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    பாஸ்கர்

    பாஸ்கர்

    இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளங்கோவனை, அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக இலுப்பூர் டி.எஸ்.பி முத்துராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். பின்னர் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை.
    • இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளா அரசு சிலந்தியாற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்.

    போதைப்பொருட்கள் புழக்கத்தை எந்தளவுக்கு தடுத்திருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக முதல்வர் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் நமது முதல்வர். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர்.

    தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை. நாங்கள் இரட்டை நிலைப்பாடு எடுப்பது கிடையாது. என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான்.

    குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும், அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும், வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.

    இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 492 நாட்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி அந்தப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தமிழக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    10 நாட்கள் மட்டுமே போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி 16-ந்தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்று 512 நாட்கள் ஆன நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் 492 நாட்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். குரல் மாதிரி பதிவு, மரபணு சோதனை என பல்வேறு கட்டங்களாக நீதி மன்றம் அனுமதி பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. 512 நாட்கள் விசாரணை நடைபெற்றாலும் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 9 முறை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

    தற்போது 10வது முறையாக இன்று ஒரு மாதததிற்கு கால அவகாசம் கேட்டு மனு செய்துள்ளது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. வட்டாரம் கூறும்போது:-

    இது கடைசியாக கேட்கும் கால அவகாசமாக இருக்கும். குற்றவாளியை நெருங்கி விட்டோம். இந்த ஒரு மாத காலத்தில் குற்றவாளியை உறுதி செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம் என்று கூறினர்.

    • படுகாயம் அடைந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    வெல்டிங் வைக்கும் போது ஏற்பட்ட மின் கசிவால் பட்டாசு குடோனில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த பட்டாசு ஆலை உரிமையாளரின் தம்பி கார்த்திக் என்பவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருவேங்கைவாசல் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் மற்றும் பிடாரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் நடைபெறும் பவுர்ணமி விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றது

    இங்கு இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா காப்புக் கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அங்கு அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்த வந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். அவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.
    • குரல் மாதிரியின் முடிவுகள் கோர்ட்டில் நேரடியாக தடயவியல் துறை மூலம் அளிக்கப்படும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    சம்பவம் நடந்தபோது வாட்ஸ் அப் இல் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், இந்த குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் முடிவுகள் வரும் பட்சத்தில் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கருதப்படுகிறது.

    இதனையடுத்து 3 பேருக்குக்குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் கோர்ட்டில் ஆஜரான 3 பேர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.

    இதனையடுத்து இன்று சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை நடைபெற்றது.

    குரல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 3 பேரையும் பாதுகாப்புடன் ஆய்வகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை வெவ்வேறு விதமாகவும், சம்பந்தப்பட்ட குற்றச்சமபவத்தில் அவர் பேசியதாக கூறப்படும் பகுதியை எழுதிக்கொடுத்தும் பேசச்சொல்லி பதிவு செய்வார்கள்.

    விதவிதமாக பேச சொல்லி குரல்மாதிரிகள் எடுக்கப்படும். குரல்மாதிரிகள் எடுக்கப்பட்ட பின் போலீஸார் அளித்த குரல் மாதிரியுடன் ஒப்பிடப்படும். அந்த சோதனை குரலின் அதிர்வின் அளவு, குரல் ஏற்ற இறக்கங்கள் அளவிடப்படும்.

    ஒவ்வொரு குரலுக்கும் ஒரு வித்தியாசம் குறியீடு இருக்கும். அதை தடயவியல் அறிவியலாளர்கள் கண்டறிவார்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்ட குரல் மாதிரியின் முடிவுகள் கோர்ட்டில் நேரடியாக தடயவியல் துறை மூலம் அளிக்கப்படும்.

    ×