என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமலையப்பபுரம் - கோவிந்தபேரி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பஞ்சாயத்து கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
  X

  தென்காசி மாவட்ட கலெக்டரிடம் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் மனு கொடுத்த காட்சி.


  திருமலையப்பபுரம் - கோவிந்தபேரி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பஞ்சாயத்து கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமலையப்பபுரத்திலிருந்து கோவிந்தபேரி செல்லும் தார்சாலையானது கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை சேதமடைந்து காணப் படுகிறது.
  • பொதுமக்களின் நலன் கருதி இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கடையம்:

  தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக, கூட்டமைப்பு தலைவரும் கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே.பாண்டியன், செயலாளரும் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவருமான பூமிநாத், கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன், பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி, தெற்கு கடையம் அ.தி.மு.க. பிரமுகர் ராமதுரை ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  திருமலையப்பபுரத்திலிருந்து கோவிந்த பேரி செல்லும் தார்சாலை யானது கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை சேதமடைந்து காணப் படுகிறது. இவ்வழியே தினமும் அரசு பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் சென்று வருகின்றன. மேலும் இவ்வழியே திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம்,மந்தியூர் கோவிந்த பேரி ஊராட்சியை சேர்ந்த 26 கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் தினமும் சென்று வருகின்றனர்.

  இந்த நிலையில் சாலை சேதமடைந்து காணப் படுவதால் மிகவும் சிரமத்திற்கு ள்ளாகியுள்ளனர். இது சம்பந்தமாக பல முறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்சாலை நபார்டு திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இதைத்தொடர்ந்து மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக பஞ்சாயத்து கூட்ட மைப்பினர் தெரிவித்தனர்.

  Next Story
  ×