என் மலர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் ஆண்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 61), விவசாயி. இவர், கடந்த 11-ந் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டு வாசல் முன்பு அவரது காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
அவர் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராஜசேகரன் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும், ராஜசேகரனுக்கு சொந்தமான காரை திருடி சென்றது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிய ஆண்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (25), கோவிந்தசாமி மகன் சந்திரபோஸ் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் மன்சூர் (வயது40). ஜவுளி கடை உரிமையாளர். இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (22) என்பவரும் நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.
இதற்கு அவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறையை வாங்கி சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்து மற்றொரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். அப்போது அந்த நோட்டை வாங்கி பார்த்து போது கள்ளநோட்டு போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த பெட்ரோல் விற்பனை நிலைய காசாளர் டேனியல் பிரபாகரன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு, இன்ஸ்பெக்டர்கள் அருணாச்சலம், ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டையும், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டதற்காக கொடுத்த நோட்டு மற்றும் சில்லறை மாற்ற கொடுத்த நோட்டு என மொத்தம் மூன்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில் 3 நோட்டுகளும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து மன்சூர், முகமதுயூசுப் ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கடையில் இரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை மாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த டாஸ்மாக்கடைக்கு சென்று அவர்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவையும் கள்ள நோட்டுகள் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன்சூர், முகமதுயூசுப் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதாக நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலெக்டர் மற்றும் தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன் உத்தரவின்பேரில் நாகை–திருவாரூர் மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மோகனரங்கன் (மணல்மேடு), சிவகுமார் (தலைஞாயிறு), பாரதிதாசன் (வைத்தீஸ்வரன்கோவில்), கமலக்கண்ணன் (கீழ்வேளூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி உட்பட்ட 15 வார்டுகளிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வீடுகள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் பல்வேறு வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய 21 மின் மோட்டார்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இடங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். ஆய்வின்போது பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் நாகை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, செம்போடை, கத்தரிப்புலம், குரவப்புலம், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்தது. அப்போது வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவரான முருகன் (வயது 38) தனது படகை கடற்கரையில் ஓரமாக நிறுத்துவதற்காக சென்றார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், நகர தி.மு.க. செயலாளர் புகழேந்தி ஆகியோர் முருகனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.வேதாரண்யம்:
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் நாகை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, செம்போடை, கத்தரிப்புலம், குரவப்புலம், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்தது. அப்போது வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவரான முருகன் (வயது 38) தனது படகை கடற்கரையில் ஓரமாக நிறுத்துவதற்காக சென்றார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், நகர தி.மு.க. செயலாளர் புகழேந்தி ஆகியோர் முருகனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
வேதாரண்யம், மே. 10-
வேதாரண்யத்தில் மின்னல் தாக்கி மீனவர் பலியானார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி ஆறுகாட்டுத்துறை பகுதியில் நேற்று பலத்த மின்னலுடன் லேசான மழை பெய்தது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மீனவர் முருகன் (38) தனது படகை கடற்கரையில் ஓரமாக நிறுத்த சென்றார். அவரை மின்னல் தாக்கியது. அவர் படகில் இறந்தார்.
வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினர் முருகன் உடலை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கி பலியான முருகனுக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
தஞ்சை மற்றும் சுற்றுப் புற பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு மழை பெய்தது. தஞ்சை அருகே உள்ள பூதலூர், செங்கிப்பட்டி பகுதியிலும் மழை பெய்தது.இதனால் பூதலூர் கீழ் பாலம், நடுத்தெருவில் தண்ணீர் தேங்கி நின்றது.இதே போல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்திலும் மழை பெய்தது.
இந்த மழை அக்னி நட்சத்திர வெயிலில் தவித்த மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு சாலக்கடை கடை வீதியில் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது.தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல கடைகள் மூடப்பட்டதால் இந்த கடைக்கு நாள்தோறும் கூட்டம் அதிகமாக வந்தது.
இதனால் அங்குள்ள வர்த்தக நிறுவனம், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடையை அகற்ற வேண்டும் என கடந்த மாதம் 2-ந் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது டாஸ்மாக் நிறுவனத்தினர் ஒரு மாதத்தில் கடையை எடுத்து விடுவதாக உறுதியளித்தனர். ஆனால் காலக்கெடு முடிந்தும் கடையை அகற்றாததால் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளங்கோவன் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் கடை மூடப்பட்டது. அதனை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்கள் திரும்பி சென்றனர். வேதாரண்யம் அன்னாப்பேட்டையில் பொது மக்கள் போராட்டம் காரணமாக கடை அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடைகளில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின்படியும், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செந்தில் அறிவுறுத்தலின்பேரிலும், திருமருகல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரசுராமன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ரகுநாதன், யேசுநாதன், மனோகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் திட்டச்சேரி, கட்டுமாவடி, திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதைதொடர்ந்து கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக பள்ளிகள் உள்ள பகுதிகளில் பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மீறி விற்பனை செய்பவர்கள் மீது பொதுசுகாதார துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் தெற்குகுத்தகை பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சசிலாமேரி (வயது 20) இவர் வேதாரண்யம் தணியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவரது தாய் மஞ்சுளா தன் இன்னொரு மகள் லீனாவை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமணைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மஞ்சுளாவின் மற்ற மகள்கள் வீட்டிலிருந்த பொழுது சசிலாமேரி வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து தாயார் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டிணம் போலீஸ் சப்- இண்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த அரசூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 67). இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த அவர் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பட்டுப்புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரை மேலையூரில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டு இருந்தது. இதனை நேற்று இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
இது பற்றி இன்று காலை தெரியவந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேலையூர் மெயின் ரோட்டில் திரண்டு இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செம்பனார் கோவில் போலீசார் சம்பவ இத்திற்கு சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் ஜாதி மோதலை உருவாக்கும் வகையில் சில அரசியல் கட்சியினர் பின்னணியில் இருந்து கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
இதன் காரணமாக மயிலாடுதுறை- பூம்புகார் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லைக்குட்பட்ட நடுக்கடலில் நேற்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கட்டையால் அடித்து தாக்கி விரட்டியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலில் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் செந்தில், குமாரசாமி, அமுதகுமார், கலைமணி ஆகிய நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, கரை திரும்பிய நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இந்தியா வந்திருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்த கூடாது என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், மோடி கோரிக்கை விடுத்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அந்திகானம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் மகன் ரமேஷ்குமார்(38). இவர் கடந்த 1½ வருடங்களாக மயிலாடுதுறை பட்டமங்கலம் கடைத்தெருவில் திருப்பூர் காட்டன் மேளா என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையிலேயே ரமேஷ்குமார் மற்றும் அவரது தாய் லட்சுமி, மனைவி சவுந்தர்யா, பணியாள் சந்தோஷ் ஆகியோர் தங்கியுள்ளனர்.
நேற்று இரவு வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று இரவு கடையின் மாடி பகுதியில் உள்ள கிரீல் கம்பியை வளைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையின் உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரமேஷ்குமார் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






