என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை துணிக்கடையில் ரூ.11 லட்சம் கொள்ளை
மயிலாடுதுறையில் துணிக்கடையின் உள்ளே புகுந்து ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அந்திகானம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் மகன் ரமேஷ்குமார்(38). இவர் கடந்த 1½ வருடங்களாக மயிலாடுதுறை பட்டமங்கலம் கடைத்தெருவில் திருப்பூர் காட்டன் மேளா என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையிலேயே ரமேஷ்குமார் மற்றும் அவரது தாய் லட்சுமி, மனைவி சவுந்தர்யா, பணியாள் சந்தோஷ் ஆகியோர் தங்கியுள்ளனர்.
நேற்று இரவு வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று இரவு கடையின் மாடி பகுதியில் உள்ள கிரீல் கம்பியை வளைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையின் உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரமேஷ்குமார் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






