search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணிக்கடை"

    • சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் காமநா யக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி காந்திமதி (வயது 38). இவர் சுந்தர் நகர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • இருவரிடம் இருந்தும் ரூ. 37 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் காமநா யக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி காந்திமதி (வயது 38).

    இவர் சுந்தர் நகர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த கடையின் மேல் தளத்தில் இருந்த துணிகளை பார்ப்பதற்காக காந்திமதி சென்றுள்ளார். அப்போது கடைக்கு வந்த 2 சிறுவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் ரூ.41,500- ஐ திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

    காந்திமதி கல்லாப் பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது துணிக்கடையில் பணத்தை திருடியது பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவை சேர்ந்த 14 வயது சிறுவனும், புது ரோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

    இருவரிடம் இருந்தும் ரூ. 37 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை
    • சுசீந்திரம் பகுதியில் துணிக்கடை ஒன்றிலும் முகமூடி அணிந்து கொள்ளையன் கைவரிசை

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் அருகே தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (வயது 37). இவர் தெங்கம்புதூர் சந்திப்பில் துணிக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை அவரது சகோதரர் ஒருவர் பக்கத்தில் உள்ள அவரது கடையை திறக்க வந்தபோது முகமது அப்துல் காதரின் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர் இது குறித்து முகமது அப்துல் காதருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் கடைக்கு விரைந்து வந்தார். கடையின் ஷட்டர்களில் போடப்பட்டிருந்த 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. மேஜை டிராயரில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. கடையில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் முகமூடி அணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    கடந்த மாதம் மணக்குடி பகுதியில் டாக்டர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது. மேலும் சுசீந்திரம் பகுதியில் துணிக்கடை ஒன்றிலும் முகமூடி அணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருந்தான். இது தொடர்பாக கேரளா ஆலப்புழாவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு நெல்லை சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தான்.

    அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி வந்துள்ளான். அவர்தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்திக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படை போலீசார் இதுதொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    • ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது41). இவர் புது சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 25 -ந் தேதி இரவு பாலகிருஷ்ணன் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்பதால் அவர் கடையை திறக்க வில்லை. அன்று இரவு அவரது கடையின் மேலே உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த பேண்ட், சட்டை உள்ளிட்ட ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • கொண்டலாம்பட்டியில் உறவினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு துணிக்கடை மேலாளர் தற்கொலை செய்தார்.
    • இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புகார வீதி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21). கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு துணிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் நேற்று தனது உறவினருக்கு செல்போனில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு கோபாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று கோபாலகிருஷ்ணN உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் கோபாலகிருஷ்ணன் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×