என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுகாட்டுத்துறையில் பலத்த மழை: மின்னல் தாக்கி மீனவர் சாவு
    X

    ஆறுகாட்டுத்துறையில் பலத்த மழை: மின்னல் தாக்கி மீனவர் சாவு

    நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் பலத்த மழை பெய்தது. இதில் வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.
    வேதாரண்யம்:

    அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் நாகை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, செம்போடை, கத்தரிப்புலம், குரவப்புலம், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்தது. அப்போது வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவரான முருகன் (வயது 38) தனது படகை கடற்கரையில் ஓரமாக நிறுத்துவதற்காக சென்றார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், நகர தி.மு.க. செயலாளர் புகழேந்தி ஆகியோர் முருகனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.வேதாரண்யம்:

    அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் நாகை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, செம்போடை, கத்தரிப்புலம், குரவப்புலம், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்தது. அப்போது வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவரான முருகன் (வயது 38) தனது படகை கடற்கரையில் ஓரமாக நிறுத்துவதற்காக சென்றார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், நகர தி.மு.க. செயலாளர் புகழேந்தி ஆகியோர் முருகனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
    Next Story
    ×