search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி-நண்பருக்கு தீவிர சிகிச்சை
    X

    தூத்துக்குடியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி-நண்பருக்கு தீவிர சிகிச்சை

    • தூத்துக்குடி முனியசாமி புரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் ( வயது 22). வக்கீல் தெருவை சேர்ந்தவர் அஜித் ( 21)
    • தூத்துக்குடி அரசு மருத்துவமனை பின்புற சாலையில் சென்றபோது திடீரென பைக் விபத்தில் சிக்கியது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முனியசாமி புரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் ( வயது 22). வக்கீல் தெருவை சேர்ந்தவர் அஜித் ( 21). நண்பர்களான இவர்கள் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பின்புற சாலையில் சென்றபோது திடீரென பைக் விபத்தில் சிக்கியது. இதில் கீழே விழுந்த விஜய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் படு காயம் அடைந்த அஜித்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் உயிரிழந்த விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×