search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனுநீதி சோழன் கல்தேர் மண்டபத்தில் புனரமைப்பு பணிகள்-அமைச்சர் பேட்டி
    X

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    மனுநீதி சோழன் கல்தேர் மண்டபத்தில் புனரமைப்பு பணிகள்-அமைச்சர் பேட்டி

    • கோவில்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கி அதை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தி, அதில் கிடைக்கும் வட்டி வருவாயை திருப்பணிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அமி.பிறவி மருந்தீஸ்வர் கோவில் மற்றும் திருவாரூர் அ.மி.தியாகராஜ சுவாமி கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மனுநீதி சோழன் கல்தேர் மண்டபத்தில் ரூ.29 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுசுவர் மற்றும் கல்தேரின் வடிவமைப்பு மாறாத வகையில் தொல்லியல்துறையின் ஒத்துழைப்போடு புனர–மைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த–ப்பட்டுள்ளது.

    இந்துசமய அற–நிலையத்துறையை பொருத்த வரையில் சிலைகள் மீட்க சிலைகள் மீட்பு குழு ஒன்று உள்ளது. அந்தவகையில் 13 சிலைகள் மீட்டுள்ளோம். அதோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டிலுள்ள சிலைகளை அடையாளம் காணப்பட்டு, அச்சிலைகளை மீட்டு வருகின்ற நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். எருக்கங்குடி கோவில், தேவி பாவனிஅம்மன் கோவில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கி அதை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தி, அதில் கிடைக்கும் வட்டி வருவாயை திருப்பணிக்கு பயன்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தினை விரிவுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுமானம் செயற்பொறியாளர் மாசிலாமணி, உதவி இயக்குநர் குலோத்துங்கன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை மணவழகன், திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், திருவாரூர் நகர்மன்ற குழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×