search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல்: பிள்ளாநல்லூர், கபிலர்மலை வார்டுகளில் தி.மு.க. வெற்றி
    X

    உள்ளாட்சி தேர்தல்: பிள்ளாநல்லூர், கபிலர்மலை வார்டுகளில் தி.மு.க. வெற்றி

    • 16 பதவியிடங்களுக்கு தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.
    • வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாமக்கல்:

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 16 பதவியிடங்களுக்கு தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது.

    20-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 16 பதவிகளுக்கு 50 மனுக்கள் பெறப்பட்டதில் 11 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதில் 5 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

    எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இளநகர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக சுப்பிரமணியம், மாவுரெட்டிப்பட்டி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக பூங்கொடி கந்தசாமி, கபிலர்மலை ஒன்றியம் சிறுநெல்லிக்கோவில் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக ஜெய்பிரவின், பரமத்தி ஒன்றியம் செருக்கலை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக சுதா சக்திவேல், திருச்செங்கோடு ஒன்றியம் சிறுமொளசி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினராக கவுரி பிரபாகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

    மீதமுள்ள 11 காலிப்பதவியிடங்களில் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று நடந்தது.

    மாவட்டத்தில் உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினராக தி.மு.க. சார்பாக போட்டியிட்ட உஷாராணி ஜனார்த்தனன் 389 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சண்முகம் 3108 ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றார்.

    நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தங்கமணி செல்வகுமார் 1407 ஓட்டுகள் வாங்கி பெற்றார். எருமப்பட்டி வடவத்தூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சகுந்தலா ராமர் 128 ஓட்டுகளுடனும், நாமகிரிபேட்டை மத்துருட்டு ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அங்கமுத்து 182 ஓட்டுகளுடனும், பள்ளிபாளையம் ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெகதீஷ் 190 ஓட்டுகளுடனும், தட்டாங்குட்டை ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நாகராஜ் 648 ஓட்டுகளுடனும் வெற்றி பெற்றனர்.

    இதேபோல் புதுச்சத்திரம் ஒன்றியம் கதிராநல்லூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சண்முகம் 174 ஓட்டுகளுடனும், ராசிபுரம் ஒன்றியம் மேளப்பாளையம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக தாமரைச்செல்வி 138 ஓட்டுகளுடனும், சேந்தமங்கலம் ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக சர்மிளா தமிழ்செல்வனும் வெற்றிபெற்றுள்ளார்கள். வெற்றிபெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×