என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நான் தூத்துக்குடிக்கு சென்ற பொழுது தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 10 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
    • ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு.

    காவேரிப்பட்டிணம்:

    முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியின் தந்தை மறைவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

    வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்துக்கு முன்பாகவே சென்னையில் அதிக கனக மழை பெய்யும் என வலியுறுத்தியது. தற்போதுள்ள அரசுக்கு அந்த செய்தி தெரிந்தும் பொருட்படுத்தவில்லை.

    சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னையில் உள்ள பொதுமக்கள் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

    அ.தி.மு.க. அரசின்போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள அரசு எந்தவித முன்னெச்சரிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் 1300 மின்மோட்டார்கள் அ.தி.மு.க. அரசில் வைத்திருந்தோம். தாழ்வான இடங்களில் கனரக ராட்சத மின் மோட்டார் வைத்து உடனடியாக மழை நீரை அகற்றினோம். ஒவ்வொரு வார்டுகளிலும் அம்மா உணவகத்தில் தரமான உணவை மக்களுக்கு வழங்கினோம். தற்போது அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகத்தை மூடிவிட்டனர்.

    இதேபோன்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசுக்கு தெரியும்.

    நான் தூத்துக்குடிக்கு சென்ற பொழுது தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 10 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

    இங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை பால், தண்ணீர், உணவு ஆகிவற்றை இந்த அரசு எதுவும் அந்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை.

    தூத்துக்குடி நான் சென்ற பொழுது அங்கு எந்த அமைச்சரும் வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இந்த அரசு செயலாற்ற அரசாக காட்சியளிக்கிறது.

    இந்தியா கூட்டணி குழப்பத்தில் உள்ளது. அடுத்த கூட்டம் நடக்குமா? இல்லையா? என தெரியவில்லை. அக்கூட்டணியில் ஒருவர் தற்போது இந்தியில் பேச வேண்டும் என கூறுகிறார். வெவ்வேறு கருத்துக்களுடைய கட்சிகள் கூட்டணி அமைப்பது நீடிக்குமா என தெரியவில்லை.

    தற்போது 2 அமைச்சர்கள் சிறைக்கு செல்கின்றனர். ஆனால் இன்னும் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் என பொறுத்திருந்து பாருங்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு.

    இவர்கள் சாதனை செய்தது ஊழல் தான். அனைத்து இடங்களிலும் கமிஷன், கரப்சன், இதுதான் அவர்களின் தாரக மந்திரம். அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியாக செயல்பட்டது. கடந்த 2½ ஆண்டு காலமாக தமிழகத்தை படுபாதாள இடத்தில் இந்த அரசு தள்ளிவிட்டுள்ளது. இந்த அரசு எதற்கெடுத்தாலும் குழு போட்டு செயல்படுகிறது. ஆகவே இந்த அரசு குழு அரசாங்கமாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி மறைந்த பூங்காவனத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
    • முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

    காவேரிப்பட்டிணம்:

    கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தந்தை மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி காவேரிப்பட்டிணத்தில் உள்ள அவரது இல்லத்தில் கே.பி முனுசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. அவருடைய தந்தை பூங்காவனம் (வயது103) கடந்த 18-ந் தேதி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காவேரிப்பட்டிணத்திற்கு வருகை புரிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, மறைந்த பூங்காவனத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி, உள்ளிட்டோரும் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.

    • மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன்.
    • மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குடகரை பகுதியில் இன்று காலை 7 மணியளிவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பயன்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளரிகளிடம் கூறியதாவது;-

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தேன்கனிக்கோட்டையில் உள்ள மலை கிராமங்களில் நான் ஆய்வு மேற்கொண்ட போது மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன். அந்த அடிப்படையில் உருவானது தான் மக்களை தேடி மருத்துவ திட்டம். இதில் தற்போது 1.67 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது நான் ஆய்வு வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் மலை கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடகரை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து சோதனை, மற்றும் கண் பரிசோதனை செய்யப்படும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டத்துக்கு பிறகு மலை கிராம மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே கும்பாபிஷேகம் நடந்த சில நாட்களிலேயே திரவுபதி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி, கோடிப்பதி பகுதியில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் புணரமைக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து மகா பாரத சொற்பொழிவு விழாவும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    மார்கழி மாதம் என்பதால் இன்று அதிகாலையிலேயே கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலி, பீரோ உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அக்கோவிலின் தர்மகர்த்தாவிடம் தெரிவித்தார்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் தர்மகர்த்தா மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கும்பாபிஷேகம் நடந்து சில நாட்களிலேயே கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    DPI0115122023: கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து நொகனூர். தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக ஓசூர்-சானமாவு

    தேன்கனிக்கோட்டை,டிச.15-

    கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன.

    இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து நொகனூர். தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக ஓசூர்-சானமாவு வன பகுதிக்கு சென்றுள்ளன. வழி நெடுகிலும் ராகி, தக்காளி, பீன்ஸ், கோஸ், தென்னை, மா, பலா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தவாறு செல்வதால், விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வரும் யானைகள் கூட்டத்தை, கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறையினர் மாநில எல்லையான தளி, ஜவளகிரி வனப்பகுதியிலே முகாமிட்டு விரட்டி வந்தனர். ஆனால், தற்போது மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் ஜவளகிரி, நொகனூர், தேன்கனிககோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக, ஓசூர் சானமாவு வனப்பகுதி, போடூர் பள்ளம் வனப்ப குதி வரை சென்றுள்ளன. இதன்மூலம் அதிகளவில் பயிர்கள் சேதமடைந் துள்ளது.

    இதனால், ராகி மற்றும் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுக ளாக காட்டு யானைகள் கூட்டத்தை மாநில எல்லை பகுதியிலே தடுத்து நிறுத் திய நிலையில், தற்போது வனத்துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஓசூர் வரை செல்லும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுக்குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-

    விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இணக்கத்துடன் கருத்துக்களை கேட்டு, வனத்துறை அதிகாரிகள் பணியாற்றாமல் அலட்சியப் போக்குடன் இருப்பதே, யானைகள் அட்டகாசத்திற்கு காரணம். இரவு நேரங்களில் பயிர்களை காவல் காக்க செல்லும் விவசாயிகளுக்கு டார்ச் லைட், பட்டாசுகள் போன்றவற்றை வழங்குவதில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன், மரக்கட்டா வனப்பகுதியில் வனத்துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அலட்சியப் போக்கு காரணமாகவும். யானை தாக்கி ஒரு வாலிபர் உயிரிழந்தார் எனவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மேலும், பயிர் சேதங்களை தடுக்கவும், யானைகள்-மனித மோதல்களை தவிர்க்கவும், பேவநத்தம் மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60 க்கும் மேற்பட்ட யானைகளை, உடனடியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதம்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 60 காட்டுயானைகளை வனத்துறையினர் ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டியிருந்த நிலையில், அவை மீண்டும் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிக்கு திரும்பின.

    இந்த நிலையில், சானமாவு காட்டில் 40 யானைகள் மற்றும் 20 யானைகள் என 2 குழுக்களாக 60 யானைகள் பிரிந்துள்ளன.

    மேலும் இவை தனித்தனியாக அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து நடமாடும் அபாயம் உள்ளது. எனவே, சானமாவு, போடூர், ஆழியாளம், ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும், யானைகளை கோபப்படுத்தும் விதமாகவோ, பொதுமக்கள் செல்பி எடுக்க முயற்சிக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆழியாளம் கிராமத்திற்குள் 40 யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.
    • மின் கம்பம் மாற்ற ரூ1.30லட்சம் பணம் கட்டணமாக செலுத்தப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை, 

    தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, 12வது வார்டில் 50வருடங்களாக சாலையில் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின் கம்பத்தை அகற்றியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூராட்சி 12வது வார்டில் பாண்டு ரங்கன் கோவில் அருகே கடந்த 50ஆண்டுகளாக சாலையில் நடுவே உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. அச்சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடி யாத நிலை இருந்தது.

    மின்கம்பத்தை அகற்று மாறு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன்யிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தி ருந்தனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12வது வார்டில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்ய வந்த கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட செயலா ளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் கவனத்துக்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர் பிரேமாசேகர் ஆகியோர் தகவல் தெரிவித் தனர். பிரகாஷ் எம்.எல்.ஏ மின்வாரிய உயர் அதிகாரி களிடம் பேசி உயர் மின்அழுத்த கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

    இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பாக மின் கம்பம் மாற்ற ரூ1.30லட்சம் பணம் மின்வாரியத்திற்கு கட்டண மாக செலுத்தப்பட்டது. அதன் பேரில் நேற்று மின்வாரிய அதிகாரிகள் பாண்டுரங்கள் கோவில் அருகே இருந்து உயர் மின்அழுத்த மின் கம்பத்தை மாற்றி மாற்று இடத்தில் மின் கம்பம் அமைத்தனர். பணி களை பேரூராட்சி தலைவர்.சீனிவாசன், பேரூராட்சி செயலாளர் மனோகரன், வார்டு கவுன்சி லர் பிரேமா சேகர், கௌரி சென்னீ ரா, மாவட்ட பிரதி நிதி சக்திவேல், பொருளாளர் வெங்கடேஷ், சந்தோஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வை யிட்டனர்.

    • மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி, 15-வது வார்டுக்குட்பட்ட காந்திநகர், 16-வது வார்டுக்குட்பட்ட லண்டன்பேட்டை பகுதி களில் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாக்கடை கால் வாய்கள் இல்லாமல் சாலை யில் தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் நகராட் சிக்கு புகார் மனு அளித்தனர். இதையடுத்து இந்த 2 இடங்களிலும் தலா ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப் பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்க நக ராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டது.

    இந்த பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச் சிக்கு நகராட்சி கமிஷனர் வசந்தி, நகர தி.மு.க. செயலாளர் நவாப் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    அப்போது பொதுமக்கள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மதியழகன் எம்.எல்.ஏ. அந்த மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் நாள ந்தா பள்ளிகளின் நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், மா நில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடே சன், பொதுக்குழு உறுப்பி னர் அஸ்லம், கவுன்சிலர்கள் சுதா சந்தோஷ், ஜெயக்குமார், மாதேஸ்வரி, விநாயகம், பாலாஜி, செந்தில்குமார், பிர்தோஷ்கான், ஹேமாவதி பரந்தாமன், மற்றும் கனல்சுப்பிரமணி, ஜான்டேவிட் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்:

    ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை, ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை, தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில், 80 மூட்டை மற்றும் 4 அட்டைப்பெட்டிகளில் 640 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5, 30,000 ஆகும். இதனை சரக்கு வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து விற்பனைக்காக சேலம் பகுதிக்கு அந்த குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து வேன் டிரைவர் அஜித்குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    • அனைத்தும் தற்போது ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.

    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை அருகே சானமாவு வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தஞ்சமடைந்தது. அந்த யானைகள் கூட்டத்தை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது, யானைக் கூட்டங்களை மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் நேற்று மாலை முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி வரும், இதேபோல் இந்த ஆண்டும் ஜவளகிரி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் தமிழக எல்லைக்குள் புகுந்தது.

    பல குழுக்களாக பிரிந்த யானை கூட்டங்கள் 50-க்கும் மேற்ப்பட்ட யானை கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.

    தற்போது ராகி, நெல் அறுவடை சீசன் காலம் என்பதால் யானைக் கூட்டங்களை விரட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து யானைக் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் நேற்று மாலை முதல் 20-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் யானைகளை விரட்டும் பணியை ஈடுபட்டனர்.

    அப்போது 50-க்கு மேற்ப்பட்ட யானைகள் தனது குட்டிகளுடன் கூட்டமாக கெலமங்கலம் உத்தனப்பள்ளி சாலையை கடந்து சென்றது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அவைகள் அனைத்தும் தற்போது ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.

    தற்போது ராயக் கோட்டை வனச்சரகர் வெங்கட்டாசலம் தலைமையில் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    • 25 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

     கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கடந்த 2023-2024-ம் கல்வி ஆண்டில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். சரக அளவில், 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில், கால்பந்து, கோ-கோ, கபடி, பூப்பந்து, கைப்பந்து, ஆக்கி, டேபிள் டென்னிஸ், செஸ் மற்றும் டென்னி காய்ட் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவி லான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மாவட்ட அளவில் கோ-கோ போட்டியில் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பிரிவிலும், கபடியில் 17 வயதிற்குப்பட்ட பிரிவிலும், கால்பந்தில் 19 வயதிற்குட் பட்ட பிரிவிலும், டேபில் டென்னிஸ் 14 வயதிற் குட்பட்ட ஒற்றையர் பிரிவி லும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    தடகளப் போட்டியில் சரக அளவில் 17 வயதிற் குட்பட்ட பிரிவில் தனி நபர் கோப்பையை வென்றுள்ள னர். மேலும் புதிய விளையாட்டுப் போட்டிக ளான சிலம்பப் போட்டியில் 4 மாணவிகள் தங்கமும், 3 வெண்கலமும், ஜூடோ போட்டியில் 7 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கமும், குத்துச் சண்டை யில் 1 தங்கமும், நீச்சல் போட்டியில் 25 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கமும் பெற்றனர். கடற் கரை வாலிபால் போட்டி யில் 17 வயதுப் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற னர். இந்த கல்வியாண்டில், 112 மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு செல்ல தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த் துள்ளனர். பள்ளி விளை யாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான கோ- கோ போட்டியில் 17 வயதுப் பிரிவில் குமாரி காவியா, பத்மா ஆகியோர் நாசிக்கில் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போட்டியில் விளை யாடிக் கொண்டிருக்கின்ற னர். டிசம்பர் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வரை நடைபெற உள்ள தேசிய அளவில் நடைபெற உள்ள இளையோர்களுக்கா ன போட்டியில் மோனிகா ஸ்ரீ, மற்றும் ஹரிதா ஆகி யோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்தி ரன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி யில், உதவி தலைமை ஆசிரி யர்கள் ரவிக்கண்ணன், பெருமாள், உடற்கல்வி இயக்குனர் திவ்ய லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் மகாலட்சுமி, மாணிக்கம், ஹசீனா பேகம், மணி மேகலை ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கல்குவாரியில் முத்து மணி பரிதாபமாக இறந்து கிடந்தார்
    • உறவினர்கள் இரு வர் மது அருந்த சென் றது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்த மான பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் முத்துரா யன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முத்து மணி 22 என்பவர் நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலை அடுத்து போலிஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்குவாரி பள்ளத் தில் இறந்துகிடந்த வாலிப ரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்க னிகோட்டை அரசு மருந்து வமனைக்கு அனுப்பி வைத்து விசாரனையி நடத்தி னர்.

    விசாரணையில் நேற்று முன்தினம் முத்துமணியுடன் அவரது உறவினர்கள் இரு வர் மது அருந்த சென் றது தெரியவந்தது. அதனால் கல்குவாரி பள்ளத்தில் கால் தவறி விழுந்து முத்துமணி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என கோணத்தில் விசாரனை மேற்கொண் வருகின்றனர் . இறந்தவரின் அண்ணன் சிவகுமார் கொடுத்த புகா ரின் பேரில் வழக்குபதிவு செய்த முத்துமணியுடன் சென்ற இருவரிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×