search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலை கிராம மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள்- அமைச்சர்
    X

    மலை கிராம மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள்- அமைச்சர்

    • மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன்.
    • மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குடகரை பகுதியில் இன்று காலை 7 மணியளிவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பயன்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளரிகளிடம் கூறியதாவது;-

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தேன்கனிக்கோட்டையில் உள்ள மலை கிராமங்களில் நான் ஆய்வு மேற்கொண்ட போது மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன். அந்த அடிப்படையில் உருவானது தான் மக்களை தேடி மருத்துவ திட்டம். இதில் தற்போது 1.67 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது நான் ஆய்வு வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் மலை கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடகரை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து சோதனை, மற்றும் கண் பரிசோதனை செய்யப்படும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டத்துக்கு பிறகு மலை கிராம மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×