என் மலர்

  நீங்கள் தேடியது "double murder case"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
  • கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சினையில் பேரனை கொன்ற பாட்டியையும் வாலிபர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

  செங்கோட்டை:

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் அருகே மேக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் கனி. இவரது மனைவி ஜைத்தூன் பீவி (வயது 70).

  இவர்களுடைய மூத்த மகன் முகமது கனியின் மகன் காசிர் அலி (26). கூலி தொழிலாளி. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

  கொலை கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

  இந்நிலையில் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கஞ்சா விற்பனை தொடர்பாக காசிர் அலியை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

  அதனை அவரது பாட்டி ஜைத்தூன் பீவி பார்த்து விட்டதால் வெளியே சொல்லி விடுவார் என நினைத்து அவரையும் அந்த வாலிபர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதல் ஜோடி கொலை வழக்கில் கொலையாளி திவாகரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. #SuruliMalaiMurder #SC
  புதுடெல்லி:

  தேனி அருகே சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு கஸ்தூரி மற்றும் அவரது காதலன் எழில் முதல்வன் ஆகியோர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகர் மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.  இதையடுத்து திவாகர் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திவாகருக்கு வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. #SuruliMalaiMurder #SC

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  6 வருடங்களுக்கு பிறகு இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  திருமானூர்:

  அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள க.மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 33). இவருக்கும், திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் (30) என்பவருக்கும் இருந்த முன் விரோத தகராறில், கடந்த 2012-ம் ஆண்டு தீபக்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முருகானந்தத்தையும், அவரது நண்பர் க.மேட்டுத்தெருவை சேர்ந்த மைனர் மகன் ஸ்டாலின் (23) என்பவரையும் அடித்து கொலை செய்து திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் புதைத்து விட்டனர்.

  இதையடுத்து திருமானூர் போலீசார் முருகானந்தம், ஸ்டாலின் உடலை தோண்டியெடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் தலைமறைவானார். இந்நிலையில், தீபக்குமார் திருமழபாடியில் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு கிடைத்த தகவலையடுத்து, திருமழபாடிக்கு சென்ற திருமானூர் போலீசார் தீபக்குமாரை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
  ×