என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஞ்சீபுரம் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் (24-ந் தேதி) காஞ்சீபுரம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு பின்னர் காஞ்சி சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்திப்பார் என்றும் பின்னர் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு மாணவ-மாணவிகள் இடையே பிரணாப்முகர்ஜி உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.



    ஜனாதிபதி வருகையொட்டி மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் கோவில்களில் பாதுகாப்பு மற்றும் முன் ஏற்பாடு பணிகளை கடந்த சில தினங்களாக கவனித்து வந்தனர்.

    இதற்காக சின்ன காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி முழு வீச்சில் நடத்தி முடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் காஞ்சீபுரம் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

    காஞ்சீபுரத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ள காரணத்தால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே காஞ்சி சங்கரமடத்தில் இருந்து அழைப்பு விடுக்கவில்லை என்றும் தெரிகிறது.

    காஞ்சிபுரம் பயணத்தை ரத்து செய்து பிரணாப் முகர்ஜி நாளை ஊட்டி செல்கிறார். ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.20 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவேற்கிறார்.

    பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி சென்று பள்ளி விழாவில் பங்கேற்கிறார். அவருடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் பலர் பங்கேற்கிறார்.

    ஆண்டு விழா முடிந்ததும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்கிறார். மறுநாள்(புதன் கிழமை) காலை ஊட்டி தாவரவியல் பூங்கா சென்று பார்வையிடுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பும் அவர் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சசிகலாவை அமைச்சர் சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பம். கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டேன். கூட்டத்தில் 85 சதவீத பொருட்கள் மீதான வரிவிதிப்பு நிறைவேறியது. இன்னும் 15 சதவீத பொருட்களுக்கு வரிவிதிப்பு குறித்து ஜூன் 3-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் கொடுத்த கோரிக்கைகளும் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வரிவிதிப்பு இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    ஜி.எஸ்.டி யில் உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முடிந்தவரை எல்லோருடைய நலனையும் பாதுகாக்கும் வகையில் மாநில அரசு சார்பில் அழுத்தம் தருகிறோம்.

    அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கு ஓ.பி.எஸ். அணியினர் தான் நிபந்தனை விதிக்கிறார்கள். அந்த அணியில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி கருத்து கூறி வருகிறார்கள். அது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது. எங்களை பொருத்தவரை நாளை அவர்கள் பேச வந்தாலும் கூட நாங்கள் தயார்.

    இனி காலத்தின் சூழ்நிலை இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தான். அவர்கள் வைக்கும் கோரிக்கை ஜெயலலிதா மரணம் பற்றியது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதற்கான தீர்வு இருக்கும்.

    ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள்.

    இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

    சசிகலாவை அமைச்சர் சந்தித்தது அவரது தனிப்பட்ட விருப்பம். கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. கட்சி ரீதியாக யாரும் அவரை சந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினி அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். கலைஞரின் வைரவிழா கண்டிப்பாக நடக்கும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினி அரசியலுக்கு வருவாரா? அவர் யாருடன் சேருவார் என்பது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பம்.

    கலைஞரின் சட்டமன்ற வைர விழா கண்டிப்பாக நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-ம் ஆண்டு நினைவு நாள் இன்று ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-ம் ஆண்டு நினைவு நாள் இன்று ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி ராஜீவ் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட நினைவு இடம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இளநீர், தர்பூசணி, பழ வகைகள், தோசை, குளிர்பானங்கள் படைக்கப்பட்டு இருந்தன.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு.

    மாவட்ட தலைவர் சிவராமன், முன்னாள் நகர தலைவர் அருள்ராஜ், நிர்வாகி அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவியும் மலர்  வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து அங்கு சர்வமத பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ராஜீவ் காந்தி நினைவு இடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ரத்ததானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொண்டர்கள் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.

    வண்டலூரில் தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல இனிப்பு வகைகள் தயாரிக்கும் கடையில் மேலாளராக வேலை பார்த்தவர்கள் சந்தோஷ், ராஜா. இவர்களும் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் தினேஷ், கார்த்திக் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றனர். காரை ராஜேஷ் என்பவர் ஓட்டினார்.

    திருவண்ணாமலை கோவிலில் கிரிவலத்தை முடித்து விட்டு 5 பேரும் சென்னைக்கு திரும்பினர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கூடுவாஞ்சேரி மேம்பாலத்துக்கு கீழே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் மோதியது.

    இதில் சந்தோஷ், ராஜா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தினேஷ், கார்த்திக், டிரைவர் ராஜேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள கார்த்திக் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ரஜினி நேற்று பேசும்போது, நாட்டில் சிஸ்டமே சரி இல்லை என்று சொல்லி இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக உள்ளது என்று தம்பிதுரை பதில் அளித்துள்ளார்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் நடைபெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், உரிமைகள் குறித்தும் எடுத்து கூறினேன்.

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா? என்பது பற்றி கருத்து தெரிவித்தபோது தமிழக அரசை மத்திய அரசு இயக்க வேண்டும் என்றால் நேரடியாகவே இயக்குவோம். மறைமுகமாக இயக்க வேண்டியது இல்லை என கூறி உள்ளார்.

    இந்த அரசை இயக்குவது தமிழக மக்கள்தான். வேறு யாரும் கிடையாது.

    ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.

    ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறி இருக்கிறார். ஜனநாயக நாட்டில் மக்கள் சேவை செய்வதற்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை.


    ரஜினி பேசும்போது, நாட்டில் சிஸ்டமே சரி இல்லை என்று சொல்லி இருக்கிறார். இது அவரது பார்வை. ஆனால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி சிறப்பான ஆட்சியாக உள்ளது.

    அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆசை. அணிகள் இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளும், பிளவும் இருப்பது சகஜம் தான். அவற்றை எல்லாம் மறந்து இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எங்களது ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மந்தைவெளி தென்கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், திருவான்மியூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பள்ளி வாகனங்களை ஆய்வு நடத்தினர்.
    திருவான்மியூர்:

    மந்தைவெளி தென்கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், திருவான்மியூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பள்ளி வாகனங்களை ஆய்வு நடத்தினர். மந்தைவெளி ஆரியபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    அதில் திருவான்மியூர், மந்தைவெளி பகுதியை சேரந்த 40 பள்ளிகளை சேர்ந்த 129 வாகனங்கள் பங்கேற்றன அவற்றில் 15 வாகனங்கள் தகுதியற்றவைகளாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 114 வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட்டது.
    அனகாபுத்தூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பம்மல்-அனகாபுத்தூர் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர்.

    இதையறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு மதுக்கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சி மேற்கொண்டனர். சங்கர் நகர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்து பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி அங்கு விரைந்து சென்று அதிகாரிகளை தொடர்பு கொண்டு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

    நெடுஞ்சாலைக்கு அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடை அமைக்க கூடாது என்று விதி இருப்பதாக எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டினார். உடனே அதிகாரிகள் கடை அமையும் இடத்தை நெடுஞ்சாலையில் இருந்து அளந்து பார்த்தனர். அப்போது 320 மீட்டர் தூரம் தான் இருந்தது தெரியவந்தது. இதனால் கடை அமைக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

    சிட்லபாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய ரூ.2000, 500 கள்ளநோட்டுடன் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    தாம்பரம்:

    சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றும் ராமதுரை, சதீஷ் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 5 ஆயிரத்து 500 மதிப்பில் புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகள் இருந்தது.

    மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.6 ஆயிரம் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் நாகர்கேனி பகுதியை சேர்ந்த யூசுப், சுல்தான் என்பது தெரிந்தது.

    அவர்களுக்கு புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகள் கிடைத்தது எப்படி? இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுகளை எங்கெல்லாம் புழக்கத்தில் விட்டு உள்ளனர்? வடமாநில கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    புதிய ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகளுடன் 2 வாலிபர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறப்படுகிறது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். சோனியா காந்தியின் உடல் நிலை சரியில்லாததால் ராகுல் காந்தி வருவதாக சொல்லப்படுகிறது.


    விழாவுக்கு வருபவர்களுடைய விபரங்களை ஸ்டாலின் அறிவிப்பார். ஜனாதிபதி வருவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறப்படுகிறது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் திடீரென இன்று காலை 6 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.

    ஆலந்தூர்:

    தனியார் டி.வி.க்கு அன்னிய முதலீடு பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீடு மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகத்தில் நேற்று முன் தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    கார்த்தி சிதம்பரத்திடம் பல்வேறு ஆவணங்களை காட்டி விசாரணை நடைபெற்றது. அவரது வாக்கு மூலத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து இருந்தனர். மேலும் கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சீலிட்டு எடுத்து சென்றனர்.


    இந்த நிலையில் இன்று காலை கார்த்தி சிதம்பரம் திடீரென லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானத்தில் அவர் சென்றார்.

    திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார் ஆகியோரை வெளியேற்றினால்தான் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான பேச்சு வார்த்தை நடக்கும் என்று மதுசூதனன் கூறினார்.
    ஆலந்தூர்:

    அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. அம்மா இல்லாத ஆட்சி மைதானம் போல இருக்கிறது. அந்த அணியினர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து எங்களை காலி செய்ய நினைக்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார் ஆகியோரை வெளியேற்றினால்தான் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான பேச்சு வார்த்தை நடக்கும்.

    திண்டுக்கல் தொகுதியில் 1972-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வேட்பாளரை நிறுத்தி அமோக வெற்றி பெற்றார். அது போல ஓ.பன்னீர் செல்வம் மக்களின் செல்வாக்கை பெற்றவர். நாங்களும் மகத்துவமான வெற்றி பெறுவோம்.

    நாங்கள் தர்மத்தின்படி நடக்கிறவர்கள். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை யாரும் விரும்பவில்லை. அது நியாயமும் இல்லை.

    ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தது ஜெயலலிதா செய்த தவறு என்று நாஞ்சில் சம்பத் கூறுகிறார். அவர் அ.தி.மு.க.காரர் கிடையாது.

    மாற்று கட்சியில் இருந்து நாஞ்சில் சம்பத் வரும் போது அவருக்கு கொள்கைப் பரப்பு துணை செயலாளர் பதவியும், இன்னோவா காரும் வழங்கப்பட்டது.
    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த காரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விட்டு விட்டார். சில நாட்கள் கழித்து சசிகலாவை சந்தித்து இன்னோவா காரையும், சூட்கேசையும் வாங்கிச் சென்று விட்டு எங்களுக்கு எதிராக பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×