என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது என்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது. இதனை தமிழக மக்களும் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

    வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்துடன் எங்களின் வெற்றிப் பயணம் என்றும் தொடரும். ஆர்.கே. நகர் தொகுதியில் அ.திமு.க. மகத்தான வெற்றியை பெரும்.

    வருகிற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் இரட்டை இலை சின்னத்துடன் அ.தி.மு.க, வெற்றிகளை மட்டுமே பெரும்.

    ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்று கேட்கிறீர்கள். இதுபற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி உரிய முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், மரகதம் குமரவேல் எம்பி. முன்னாள் எம்எல்ஏ வி.சோமசுந்தரம். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம் நிர்வாகிகள் வள்ளிநாயகம், அத்திவாக்கம் ரமேஷ். அக்ரி நாகராஜன், தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பழவந்தாங்கலில் இன்று காலை பங்கு சந்தை ஆலோசகரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    நங்கநல்லூர் 6-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கல்யாணசுந்தரம் (வயது48). பங்குச் சந்தை முதலீடு ஆலோசகர். வங்கி, தனியார் லோன்களும் வாங்கி கொடுத்து வந்தார்.

    இன்று காலை அவர் பழவந்தாங்கல் வோல்டாஸ் சாலையில் உள்ள பள்ளியில் மகளை இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.

    அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கல்யாணசுந்தரம் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார்.

    மர்ம கும்பல் கல்யாண சுந்தரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கூச்சலிட்ட படி திரண்டனர்.

    உடனே கொலைவெறி கும்பல் ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த கல்யாணசுந்தரத்துக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் இந்த கொலை முயற்சி நடந்ததாக தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நேற்று மாலை பள்ளி முடிந்து வீடுதிரும்பிய 10-ம் வகுப்பு மாணவன் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த போது நிலை தடுமாறி பஸ் சக்கரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த முடையூரை சேரந்தவர் ஏழுமலை. இவரதுமகன் சந்துரு (வயது 15).

    திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீடுதிரும்ப மதுராந்தகம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் சந்துரு பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார்.

    தத்தலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது நிலை தடுமாறிய சந்துரு பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.

    பஸ்சின் பின்பக்க டயரில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர்.

    இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் நகராட்சி கமி‌ஷனர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகராட்சி கமி‌ஷனரா பணியாற்றி வருபவர் சர்தார். இவர் காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    சர்தார் மீது லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சர்தார் வீட்டில் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    டி.எஸ்.பி. சிவபாதக சேகரன் தலைமையில் 8 அதிகாரிகள் இந்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சர்தார் வீட்டின் கதவை மூடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் உள்ள சர்தாரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    சர்தாரின் மனைவி மற்றும் குழந்தைகள் துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். அங்கும் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    நகராட்சி கமி‌ஷனர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொச்சியில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொச்சியில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த முஸ்தாக் (வயது 49), பஷீர் ராவுத்தர் (45) ஆகியோர் வந்தனர். இவர்களின் உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது முஸ்தாக்கின் உடைமைகளில் 7 தங்க கட்டிகள் இருந்தன. இதையடுத்து ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 820 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல், பஷீர்ராவுத்தர் வைத்திருந்த பைகளில் 4 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

    துபாயில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தின் இருக்கையில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததாகவும், அங்கிருந்து உள்நாட்டு விமானம் வந்தபோது அவற்றில் இருவரும் ஏறி தங்கத்தை கடத்தி வந்து இருப்பதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    இதேபோல், கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது (34) என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கச்சங்கிலி மற்றும் மோதிரத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முஸ்தாக்கை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    செம்மஞ்சேரியில் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரியில் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோந்தவர் துருவராகமவுலிகா (வயது 18). இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று காலை வழக்கம் போல் துருவராகமவுலிகா தேர்வு எழுதினார். அந்த மாணவி தேர்வில் காப்பி அடித்ததாக கூறி பல்கலைக்கழக நிர்வாகத்தால் தேர்வு நடைபெறும் அறையில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

    சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றியதால் மனமுடைந்த அவர் நேராக விடுதிக்கு சென்றார். அதே பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்கும் தன்னுடைய சகோதரர் ராக்கேஷ்ரெட்டிக்கு செல்போனில் தற்கொலை முடிவு குறித்து குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்போன் அனுமதியில்லாததால் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்த சகோதரர் குறுந்தகவலை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் அழுது கொண்டு சகோதரி தங்கியுள்ள விடுதி அறைக்கு ஓடினார். மாணவி தங்கியிருந்த அறை தாழிடப்பட்டிருந்ததை கண்டு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. பின்னர் நிர்வாகத்தினர் இது குறித்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே மாணவி அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அந்த மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உண்மையில் மாணவி தேர்வில் காப்பியடித்து தேர்வு கண்காணிப்பு அலுவலர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து அப்போது தேர்வு அறையிலிருந்த மாணவர்களிடமும், போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மாணவி இறந்த தகவல் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் விடுதியில் கண்ணாடி, ஜன்னல்கள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த படுக்கைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர்.

    இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் பாதுகாப்புக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 
    ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் ரேசன் கடைகள் முன்பு போராட்டம் நடந்தது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் வாலாஜாபாத் பஸ்நிலையம் அருகே சின்னக்கடை பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்க்கரை விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சேகர், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் சுரேஷ் குமார், சுந்தர்ராமன், தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடை முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நகரசெயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், வ.கந்தசாமி, சுகுமாறன், சிகாமணி, சந்துரு, சுரேஷ் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செய்யூரில் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு தலைமையிலும், மதுராந்தகத்தில் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமையில் ரேசன் கடைகள் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் நகரத்தில் 11 கடைகள் உட்பட வட்டத்தில் உள்ள 232 கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



    திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள ரேசன் கடை முன்பு வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மீஞ்சூர் சூர்யா நகரில் நகர செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்திப்பட்டு முன்னாள் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பழவேற்காட்டில் முகமது அலி தலைமையில் போராட்டம் நடந்தது.

    திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள ரேசன் கடை முன்பு கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுதி செயலாளர் கே.பி.சங்கர் முன்னிலை வகிக்கிறார். இதில் மு.ராமநாதன், நாகலிங்கம், விவேகானந்தன் உட்பட 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தில் மிக விரைவில் அரசு பள்ளியில் பயிலும் திறமை மிக்க 100 மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுக்கு குழுக்களாக பிரித்து அனுப்ப உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    தாம்பரம்:

    பல்லாவரம் மற்றும் அனகாபுத்தூரில் உள்ள அரசு பள்ளிகளில் புதிய கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மிக விரைவில் அரசு பள்ளியில் பயிலும் திறமை மிக்க 100 மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், நார்வே, பிரான்சு போன்ற நாடுகளுக்கு குழுக்களாக பிரித்து அனுப்ப உள்ளோம்.

    அப்போது அந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வளர்ச்சி, கல்வி, புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

    இதற்காக ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவிடப்படும். 15 நாட்களுக்கு மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள்.

    தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டு தோறும் காமராஜர் பிறந்த நாளில் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

    மாவட்டந்தோறும் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 15 பேரும், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 15 பேரும் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 960 பேர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆண்டு தோறும் ரூ.1 கோடியே 42 லட்சம் ஒதுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அச்சிறுப்பாக்கத்தில் ரூ.10 ஆயிரம் கடனை திருப்பிக் கேட்ட நர்சு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக டாக்டர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுராந்தகம்:

    அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டையில் வசித்து வருபவர் இல்லா மல்லி. அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இவர் சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பாண்டியனுக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகை கடனாக கொடுத்திருந்தார். இதில் அவர் ரூ.10 ஆயிரம் மட்டும், மீதி தொகை பாண்டியன் கொடுக்க வேண்டும் என்று தெரிகிறது.

    இதனை இல்லா மல்லி அடிக்கடி கேட்டு வந்தார். இதனால் பாண்டியனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனை அறிந்த கடலூரில் வசிக்கும் பாண்டியனின் மனைவி ஜெயலட்சுமி, அவரது மகன்கள் டாக்டர் சுபாஷ், சுரேஷ் மற்றும் உறவினரான பண்ரூட்டியை சேர்ந்த பல் டாக்டர் தாமரைச் செல்வன் ஆகியோர் நேற்று இரவு இல்லா மல்லி வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 4 பேரும் இல்லாமல்லியை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இல்லா மல்லி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமி, டாக்டர் சுபாஷ், சுரேஷ், பல் டாக்டர் தாமரைச் செல்வன் ஆகியோரை கைது செய்தனர்.
    சோழிங்கநல்லூரில் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் தமிழரசன். இவரது மகன் கோகுல் பிரசாந்த். நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளிக்கு சென்று திரும்பிய கோகுல் பிரசாந்த் சோகமாக காணப்பட்டார். அவரிடம் பெற்றோர் விசாரித்த போது எதுவும் கூறவில்லை.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோகுல் பிரசாந்த் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. கோகுல் பிரசாந்ந்திடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒரு பிரச்சினை தொடர்பாக கண்டித்து அறிவுரை கூறியதாக தெரிகிறது.

    இதில் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிநபர், விற்பனை கூடங்கள், வணிக நிறுவனங்கள் என யாரும் தங்களின் வியாபாரத்தில் சீட்டு, கூப்பன், குலுக்கல் திட்டங்கள் நடத்தி பொருட்கள் வழங்ககூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் பரிசுகள் வழங்கும் குலுக்கல் திட்டத்தை நடத்துகின்றனர்.

    இதன் மூலம் பொருட்களை விலை அதிகரித்து விற்பது தரமற்ற பொருட்களை வழங்குவது எடை குறைந்த பழைய ஸ்டாக்கில் உள்ள பொருட்களை வழங்குவதாகவும் இதன் மூலம் நுகர்வோர்கள் வணிகர்களால் ஏமாற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிநபர், விற்பனை கூடங்கள், வணிக நிறுவனங்கள் என யாரும் தங்களின் வியாபாரத்தில் சீட்டு, கூப்பன், குலுக்கல் திட்டங்கள் நடத்தி பொருட்கள் வழங்ககூடாது. மீறி வழங்கினால் தமிழ்நாடு பரிசுதிட்டம் தடுப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூவத்தூரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரை சேர்ந்தவர் தயாளன். இவர் தனது நிலத்துக்கு பட்டா மாற்றம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் நடராஜனிடம் மனு அளித்தார்.

    இதனை ஆய்வு செய்த நடராஜன் நிலத்தில் சில வில்லங்கம் இருப்பதால் அதனை சரி செய்ய ரூ.5 லட்சம் செலவாகும். முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று கூறினார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத தயாளன் இது பற்றி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனை படி தயாளன்ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கிராம அலுவலர் நடராஜனிடம் கொடுத்தார்.

    அதனை அவர் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நடராஜனை கைது செய்தனர். இது பற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×