search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் மாணவி"

    • கல்லூரி மாணவியும், அனுதீப்பும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
    • அனுதீப்பிடம் இருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், துக்கிராலாவை சேர்ந்தவர் அனுதீப் (வயது 25). இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் வெளியூரில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். இதனால் அனுதீப் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இவரது பக்கத்து ஊரை சேர்ந்த 23 வயது மாணவி காக்கிநாடாவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    கல்லூரி மாணவியும், அனுதீப்பும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கல்லூரி மாணவியின் விடுதிக்கு சென்ற அனுதீப் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி ஆசைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை ஒரு அறையில் தள்ளி பூட்டினார்.

    இதையடுத்து வெளியே சென்ற அனுதீப் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்த எண்ணெய்யை கொதிக்க வைத்து மாணவியின் கை கால்களில் ஊற்றினார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். பின்னர் மாணவியை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து 13 நாட்களாக பலாத்காரம் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.

    அனுதீப்பிடம் இருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். மாணவியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து ஏலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுதீப்பை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    தனியாக இருந்ததால் போதைக்கு அடிமையாகி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

    போதைக்கு அடிமையான அவர் பல பெண்களை மயக்கி பலாத்காரம் செய்து அவர்களது வாழ்க்கையை சீரழித்து உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார்.

    கோவை

    சேலத்தை சேர்ந்த 21 வயது மாணவி. இவர் நெல்லையில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    அப்போது அதே கல்லூரியில் படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுதத்து அவர்கள் மாணவியை நெல்லை அண்ணா பல்கலை கழகத்தில் இருந்து மாறுதல் பெற்று கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்தனர். பெற்றோர் காதலை பிரித்ததால் மாணவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.இதனை பார்த்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மாணவி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பாதுகாப்பு கேட்டு போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
    • மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென் செங்கம்பாளையத்தை சேர்ந்த 19 வயது வாலிபர். இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது என்ஜினியரிங் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றொருக்கு தெரியவந்தது. அவர்கள் தங்களது மகள் தன்னைவிட 3 வயது குறைந்த வாலிபரை காதலிப்பதை எதிர்த்தனர்மேலும், வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர்.

    இதனால், 2 பேரும் கடந்த 4-ந்தேதி விட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்கள் பாதுகாப்பு கேட்டு கோட்டூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ×