என் மலர்
காஞ்சிபுரம்
தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்பது கட்சியல்ல. அது ஒரு தற்காலிக அமைப்புதான். எங்கள் நோக்கம் அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் கையில் எடுப்பதுதான். அதன்படி செயல்படுகிறோம். நாஞ்சில் சம்பத் விலகிய காரணம் தெரியவில்லை.
அம்மா இங்கு இருக்கும் போது, திராவிடமும், அண்ணாவும் இங்கே இருக்கிறது. தனி கட்சி ஆரம்பிக்க கூடாது என்று நான் சொன்னது உண்மைதான். இந்த அமைப்பு பதிவு செய்யப்படவில்லை.

கே.சி.பழனிசாமி, தமிழகம் நலன் கருதி ஒரு கருத்தை சொன்னார். அதற்காக அவரை கட்சியை விட்டு நீக்குவதா? என்னைப் பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.
கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை அது சாத்தியமல்ல. அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின் படி பொதுச் செயலாளர் தான். கட்சி நிர்வாகிகளை நியமிக்கவும் நீக்கவும் முடியும். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அதை செய்ய முடியாது. அவர்கள் செய்த நியமனமும் செல்லாது, நீக்கியதும் செல்லாது.
பா.ஜனதாவை நாங்கள் ஆதரிக்கவில்லை. அப்படி இருந்து இருந்தால் எங்கள் மீது ஏன் இரட்டை இலை வழக்கு, வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.
18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை சசிகலா, தினகரன் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை எதிர்த்து இவர்களால் எதுவும் செய்ய முடியாது. எந்த திட்டங்களையும் கொண்டு வர முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இவர்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை.
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை பா.ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்தது. அதற்கு அ.தி.மு.க. 37 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தாலே போதும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிடும். பா.ஜனதா கட்சி கவிழ்ந்து விடும். அடுத்ததாக வருகின்ற அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை கண்டிப்பாக அமைத்துதான் ஆக வேண்டிய நிலை ஏற்படும்.
பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதைத்தான் அ.தி.மு.க. கேட்டு கொண்டிருக்கிறது.
இவர்கள் கட்சி கொடி, சின்னம் குறித்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் எதற்குதான் வழக்கு தொடரவில்லை. நாங்கள் கேட்கும் சின்னத்திற்கு வழக்கு தொடர்ந்தனர். நானும் வெற்றிவேலும் ஊழலை வெளிப்படுத்தினோம். அதற்கு எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க.விற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடுவை 2 நாளில் சந்தித்து நன்றி சொல்ல இருக்கிறேன்.
அ.தி.மு.க.வினர் யாரை பற்றி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் மத்திய அரசை பற்றி மட்டும் விமர்சிக்க கூடாது. அப்படி பேசினால் நடவடிக்கை எடுப்போம். வழக்கு தொடர்வோம் என்ற மனப்பான்மையில் உள்ளனர். எச்.ராஜா, திராவிட இயக்கத்தை பற்றியும், பெரியாரை பற்றியும் பேசலாம். ஆனால் வழக்கு போட மாட்டார்கள். சந்திரபாபு நாயுடுவுக்கு இருக்கிற தைரியம் இவர்களுக்கு இல்லை. நம்முடைய மாநில உரிமையை கேட்பதற்கு பயப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
திருப்பூரை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 22). இவர் சென்னை பூந்தமல்லியை அடுத்த கந்தன்சாவடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இவருடன் வேலை பார்க்கும் சரத், ஆந்திராவை சேர்ந்த மெகா, கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா, அகிலா மற்றும் நண்பர் நாமக்கல்லை சேர்ந்த பிரசாந்த்குமார் ஆகியோர் விடுமுறையை கழிப்பதற்காக காரில் பாண்டிச்சேரிக்கு சென்றனர்.
இன்று அதிகாலை 6 பேரும் காரில் சென்னையை நோக்கி வந்தனர். காரை தீபக் ஓட்டினார்.
மதுராந்தகத்தை அடுத்த படாளம் அருகே கொளம்பாக்கத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் கார் நொறுங்கி 6 பேரும் படுகாயம் அடைந்தனர். தீபக், ஐஸ்வர்யா, பிரசாத் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மெகா, சரத், அகிலா ஆகியோரை மீட்டு ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெகா உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவை சேர்ந்தவர் இஸ்மாயில் மியா (வயது 25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் திரிபுராவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலைப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.
இஸ்மாயில் மியாவும், அவரது சொந்த ஊரைச்சேர்ந்த ஜஹாங்கீர் உசேன் (வயது 24) என்பவரும் நண்பர்கள். ஜஹாங்கீர் உசேன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் ஜஹாங்கீர் உசேன் அடிக்கடி இஸ்மாயில் மியா வீட்டிற்கு வந்து செல்வார்.
இஸ்மாயில் மியா நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றதால், வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஜஹாங்கீர் உசேன் இஸ்மாயிலின் மனைவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அதன்படி அவர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றதும், வீட்டுக்குள் வந்த ஜஹாங்கீர் கதவை தாழிட்டு விட்டு திடீரென அவரை கட்டி பிடித்துள்ளார்.
பின்னர் அவரது வாயை பொத்திவிட்டு வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. இதுபற்றி யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இரவில் வீட்டுக்கு வந்த இஸ்மாயில் மியாவிடம், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அவரது மனைவி எடுத்துக் கூறினார்.
இது குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜஹாங்கீரை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் இஸ்மாயிலின் மனைவியை கற்பழித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜஹாங்கீர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர். #tamilnews
மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு கடற்கரையோரத்தில் ஏராளமான விடுதிகள் உள்ளன. சுற்றுலா பயணிகளை கவர விடுதியின் மேல் பகுதியில் கீற்று கொட்டகைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த கீற்று கொட்டகை தீப்பிடித்து எரிந்து அருகில் இருந்த 4 விடுதிகளுக்கு பரவியது. இதில் அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையடுத்து உடனடியாக அனைத்து விடுதிகளிலும் கீற்று கொட்டகைகளை அகற்றிவிட்டு தகரசீட் போட வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். கால அவகாசத்தை மீறிய சில விடுதிகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர் .
தற்போது அனைத்து விடுதிகளிலும் மாடியில் இருந்த கீற்று கொட்டகை அகற்றப்பட்டு உள்ளது. இதனால் மாமல்லபுரம் கடலோர விடுதிகள் அனைத்தும் புதுப்பொழிவுடன் கானப்படுகிறது. #Tamilnews
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் தீர்மான கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மாநில தலைவர்கள், மாநில சட்ட மன்ற தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறோம்.
ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக 2 நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் பெற இருக்கிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து முன்னாள், இன்னாள் மாநில தலைவர்கள் மாவட்ட தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கான தங்கும் ஏற்பாடு போக்குவரத்து ஏற்பாடு டெல்லியில் செய்யப்பட்டு உள்ளது.
ராகுல் தலைவராக பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் காங்கிரசார் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே நான் சொன்னபடி இது வாசமற்ற காகித பூ பட்ஜெட் இந்த பட்ஜெட்டில் மக்கள் நலனுக்கான, மக்கள் நலத்திட்டங்களுக்கான திட்டங்கள் இல்லை. இது சாதாரண பட்ஜெட்.
சட்ட சபையில் நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை நான் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். தீர்மானத்தோடு நிற்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி தரவேண்டும்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கட்சியும், ஜெகன் மோகன் ரெட்டி கட்சியும் நேர் எதிர் கட்சிகள் ஆனால் மக்கள் நலன் கருதி இரு கட்சிகளும் கைகோர்த்து உள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து உள்ளனர். இதற்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
இதேபோல் ஆளும் அ.தி.மு.க. அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் ஆதரிக்கும். ஏற்கனவே தி.மு.க. ஆதரிப்பதாக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் ராஜினாமாவோ, நம்பிக்கை இல்லா தீர்மானமோ எது செய்தாலும் அதை ஆதரிப்போம். மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க. அரசு இதனை செய்ய ஏன் தயங்குகிறது. 2 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் பெற்றே தீர வேண்டும்.

பா.ஜனதாவின் முடிவின் தொடக்கம்தான் கடைசியாக நடந்த 10 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வி. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பா.ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்டுகிறார்கள். ஆனால் மத்திய அரசு திருந்தவில்லை.
டி.டி.வி தினகரன் புதிய அமைப்பு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். அவர் எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
திருமழிசையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பென்னி (வயது 46) பெயிண்டர். சுங்குவார் சத்திரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் மொலிச்சூர் சமுதாய கூடம் அருகே கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பென்னியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பென்னி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. பெண் தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக பென்னியுடன் தங்கி இருந்தவர்கள் யார்? அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர். #Tamilnews
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் காந்தி தெருவை சேர்ந்தவர் குப்பன் (வயது 46). இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு இன்று தேர்வு தொடங்கியது.
குப்பனுக்கு சொந்தமான விவசாய நிலம் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு அவர் விவசாயம் செய்து வந்தார். விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் ஹாலோ பிளாக் செய்து விற்று வந்தார்.
நேற்று விவசாய நிலத்துக்கு சென்ற குப்பன் வீடு திரும்பிவல்லை. இன்று காலை அவர் தனது விவசாய நிலத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன.
இது தொடர்பாக அவரது மனைவி மாலாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கூலி தகராறில் குப்பன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
குப்பன் விவசாய நிலத்தில் ஹாலோ பிளாக் தயாரித்து விற்று வந்தார். அவரிடம் வட மாநிலத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு கூலி பாக்கி கொடுக்க வேண்டி இருந்தது. சரியாக கூலி கொடுக்காததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 பேரும் வேலையை விட்டு நின்று விட்டனர். இதனால் கடந்த 6 மாதமாக குப்பன் ஹாலோ பிளாக் தயாரிக்கவில்லை.
இந்த நிலையில் குப்பன் 4 பேருக்கும் போன் செய்து வரவழைத்தார். நேற்று இரவு 4 பேரும் குப்பனை சந்தித்தனர். அவர்களுக்கு குப்பன் இரவு உணவு வாங்கி கொடுத்தார். பின்னர் அவர்களை விவசாய நிலத்துக்கு அழைத்து சென்று ரூ.3000 பணம் கொடுத்தார். இனி ஹாலோ பிளாக் தயாரிக்கும் வேலையை தொடங்குவோம். விரைவில் கூலி பாக்கியை தருகிறேன் என்றார்.
ஆனால் அவர்கள் கூலி பாக்கி முழுவதையும் உடனே தரவேண்டும். தந்தால் தான் வேலை பார்ப்போம் என்றனர். இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் உருட்டுக்கட்டையால் குப்பனை தாக்கி கொலை செய்தனர். பின்னர் பிணத்தை அங்கேயே போட்டு விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இந்த கொலை தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வட மாநில வாலிபர்களை தேடி வருகிறார். #Tamilnews
நீலாங்கரையை அடுத்த கானத்தூர், துலுக்கானந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவகி (வயது 40). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட மாத்திரைகளை தின்ற போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேவகியை அதே ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவகி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் தேவகியின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கானத்தூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தேவகிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அடையாறு துணை கமிஷனர் ரோகித் நாதன் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். #Tamilnews
காஞ்சிபுரம் அடுத்த சீமாளம் அருந்ததிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் குமார் (37). கட்டிட மேஸ்திரி.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த அமுதாவை ஏற்றிக் கொண்டு விஷாரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கீழ்கதிர்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது கீழம்பி கிராமத்திலிருந்து வந்த மோகன் (38) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அமுதா, மோகன் ஆகியோர் காயத்துடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
தென்காசியை சேர்ந்தவர் காசி. இவர், உறவினர்கள் 9 பேருடன் காரில் சென்னை நோக்கி வந்தார். 1½ வயதான பேரன் தர்ஷன், மற்றும் 4 பெண்கள், 3 ஆண்கள், மற்றொரு குழந்தை இருந்தனர்.
காரை காசி ஓட்டி வந்தார். அச்சரப்பாக்கம் அருகே இன்று அதிகாலை கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் காசி, 1½ வயது சிறுவன் தர்ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 8 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
காயம் அடைந்த காசி, சிறுவன் தர்ஷன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் தர்ஷன் பரிதாபமாக இறந்தான். காசிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் பாரத் நகரை சேர்ந்தவர் சத்யசிவம். தனியார் நிறுவன ஊழியர். இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தார். திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ. 3½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதேபோல் அதே பகுதி சுரேந்தர் நகரை சேர்ந்த சத்யானந்தா என்பவரது வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் ரூ. 25 ஆயிரம் மற்றும் ஐபேடு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம்:
திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி சரக்குகளை ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது.
திண்டுக்கல்லை சேர்ந்த அன்பரசன் (வயது 42) லாரியை ஓட்டினார். கிளீனராக குமரேசன் இருந்தார். இன்று அதிகாலை மதுராந்தகத்தை அடுத்த மேல்வளவன்பேட்டை அருகே லாரி வந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரை தாண்டி எதிர்புறம் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மற்றொரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரி டிரைவர் அன்பரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் குமரேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய மற்றொரு லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி தறிகெட்டு எதிர் திசையில் ஓடியபோது மற்ற வாகனங்கள் வராததால் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை.
இந்த விபத்தால் அப்பகுயில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






