என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பரம்பாக்கத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை
    X

    செம்பரம்பாக்கத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை

    திருமழிசையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருமழிசையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பென்னி (வயது 46) பெயிண்டர். சுங்குவார் சத்திரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் மொலிச்சூர் சமுதாய கூடம் அருகே கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பென்னியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பென்னி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. பெண் தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக பென்னியுடன் தங்கி இருந்தவர்கள் யார்? அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×