என் மலர்
செய்திகள்

ஆதம்பாக்கத்தில் 2 வீடுகளில் கொள்ளை
ஆதம்பாக்கத்தில் 2 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் பாரத் நகரை சேர்ந்தவர் சத்யசிவம். தனியார் நிறுவன ஊழியர். இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தார். திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ. 3½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதேபோல் அதே பகுதி சுரேந்தர் நகரை சேர்ந்த சத்யானந்தா என்பவரது வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல் ரூ. 25 ஆயிரம் மற்றும் ஐபேடு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






