என் மலர்
செய்திகள்

மதுராந்தகம் அருகே லாரிகள் மோதல்: டிரைவர் பலி
மதுராந்தகம்:
திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி சரக்குகளை ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது.
திண்டுக்கல்லை சேர்ந்த அன்பரசன் (வயது 42) லாரியை ஓட்டினார். கிளீனராக குமரேசன் இருந்தார். இன்று அதிகாலை மதுராந்தகத்தை அடுத்த மேல்வளவன்பேட்டை அருகே லாரி வந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரை தாண்டி எதிர்புறம் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மற்றொரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரி டிரைவர் அன்பரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனர் குமரேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய மற்றொரு லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி தறிகெட்டு எதிர் திசையில் ஓடியபோது மற்ற வாகனங்கள் வராததால் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை.
இந்த விபத்தால் அப்பகுயில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






