search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கதமிழ்ச்செல்வன்"

    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #ThangaTamilSelvan #EdappadiPalaniswami #KodanadEstate

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    அந்த சம்பவம் முதல்வர் பழனிச்சாமி ஏற்பாட்டில்தான் நடந்ததா? என்பது விசாரணையில்தான் தெரிய வரும். முதல்வர் மீது பழி சுமத்தப்பட்டிருப்பதால் அவர் தனது பதவியை விட்டு விலகி வேறு ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும். தான் நிரபராதி என நிரூபித்தபின் மீண்டும் முதல்வர் பதவிக்கு வரலாம். இதை அவர் செய்வாரா? என்பது தெரிய வில்லை.


    இந்த சம்பவத்தில் யார்? யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். தனி நீதிபதி மூலமாகவோ, சி.பி.ஐ. மூலமாகவோ விசாரித்து அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. 3 மாதத்தில் விசாரணை முடியும் என கூறிய நிலையில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இழுத்துக்கொண்டே செல்வது ஏன்? அப்படி என்றால் இந்த விசாரணை கமி‌ஷன் இன்னும் எத்தனை ஆண்டுக்குள் இதனை முடிக்கும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர். #ThangaTamilSelvan #EdappadiPalaniswami #KodanadEstate

    18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை எதிர்த்து வருகிற செவ்வாய்க்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கான மனு தாக்கல் செய்யப்படுகிறது. #18MLAsCaseVerdict #SupremeCourt
    சென்னை:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று இந்திராபானர்ஜி தீர்ப்பளித்தார். செல்லாது என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணன் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வெளியிட்டார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

    இதைத்தொடர்ந்து 18 தொகுதிகளையும் காலி இடமாக அறிவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மதுரையில் கூடி ஆலோசித்தனர். டி.டி.வி.தினகரன் முன்னிலையில் நேற்று அந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வக்கீல்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மூன்றாவது நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்வதா? என்று ஆய்வு செய்தனர். அப்பீல் செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளது. என்றாலும் அதற்கு முன்னதாக அப்பீல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

    எங்கள் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களான கபில் சிபில், அசோக் சிங்வி ஆகியோரை தொடர்பு கொண்டு எங்களுக்காக சுப்ரீம்கோர்ட்டில் வாதாட ஏற்பாடு செய்து வருகிறார். வருகிற செவ்வாய்க்கிழமை (30-ந்தேதி) சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கான மனு தாக்கல் செய்யப்படும்.

    ஏற்கனவே 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு 650 பக்கம் உள்ளது. இப்போது 3-வது நீதிபதியின் தீர்ப்பு 450 பக்கம் உள்ளது. இவற்றை டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

    முதல்-அமைச்சரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்ததற்காக சபாநாயகர் எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். ஆனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே சபாநாயகரின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம். இதில் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    கர்நாடகத்தில் எடியூரப்பா வழக்கிலும் இதேபோல்தான் நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி கிடைத்தது. அதேபோல் எங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் ஆகிய 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால்தான் 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார்.

    இவர் ஏற்கனவே சொன்ன 2 நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரி என்று பார்த்துதான் தீர்ப்பு கூற வேண்டும். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக தீர்ப்பு கூறி உள்ளார். இது விதியை மீறியதாகும்.

    இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைத்து வாதாடுவோம். நாங்கள் மேல்முறையீடு செய்தாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 18 பேரும் மீண்டும் தேர்தலை சந்திக்கவும் தயாராகவே உள்ளோம்.

    தினகரனை ஆதரிக்கும் ஒரே காரணத்துக்காக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உள்ளதாக கேள்விப்படுகிறோம். இவர்கள் 3 பேர் மீதும் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது.

    இவ்வளவு ஏன்? எங்கள் 18 பேரையும் அ.தி.மு.க.வில் இருந்து இன்னும் நீக்க முடியாமல்தான் உள்ளனர். தைரியம் இருந்தால் நீக்கிப் பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #SupremeCourt
    நீதிபதி தீர்ப்பை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்த எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பேன் என்று தங்க தமிழ்ச் செல்வன் கூறினார்.
    சென்னை:

    நீதிபதி தீர்ப்பை விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் நான் அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களித்தேன். அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இது உலகத்துக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் மாத்தி ஓட்டு போட்டார்கள்.

    இவர்கள் செய்தது தவறு என்று நீதிமன்றம் கூறி இருந்தால் தீர்ப்பை வரவேற்று இருப்பேன். அதை சொல்லாமல் தீர்ப்பு கூறுகிறார்கள்.

    உண்மையை சொன்னால் கோர்ட்டு அவமதிப்பு என்று எனக்கு நோட்டீசு அனுப்புகிறார்கள். நான் அதற்கு பயப்படவில்லை. விளக்கம் அளிப்பேன். நான் அரசு வக்கீலை பார்த்து கேட்கிறேன்.

    சட்டம் அனைவருக்கும் சமம். பொதுமக்கள் இறுதியாக நம்பும் இடம் நீதிமன்றம்தான். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வேண்டும் என்று நான் கேட்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் 11 பேர் அரசாங்கத்தை கவிழ்க்க, எதிர்த்து வாக்களித்தார்கள்.

    அவர்கள் செய்தது சரியா? தவறா? என்று நீதிமன்றம் ஏன் கூறவில்லை. அதை சொல்லாமல் தீர்ப்பு கூறினால் எப்படி?

    நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்கிறார்கள். அப்படியானால் நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 4 பேர் கருத்து தெரிவித்தார்களே? அவர்களுக்கு ஏன் நோட்டீசு அனுப்பவில்லை. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் என்பதால் பயமா?

    நான் சாதாரண குடிமகன் என்பதால் எனக்கு நோட்டீசா? என்னை மிரட்டி பார்க்கிறார்களா? சட்டம் எல்லோருக்கும் சமம்.

    எனக்கு நோட்டீசு வந்தால் இதையெல்லாம் விளக்கமாக எடுத்து சொல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தினகரன் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். யாரும் பிளவுபடுத்த முடியாது என்று பிரவு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran

    கள்ளக்குறிச்சி:

    தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான பிரபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் தலைமையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.

    இந்த அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடையே பிளவு படுத்த யார் நினைத்தாலும் அது முடியாது. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் இருந்து வருகிறோம். தமிழக மக்களுக்காக பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran 

    ×