என் மலர்tooltip icon

    செய்திகள்

    அச்சரப்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலி
    X

    அச்சரப்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலி

    அச்சரப்பாகம் அருகே இன்று அதிகாலை கார் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    தென்காசியை சேர்ந்தவர் காசி. இவர், உறவினர்கள் 9 பேருடன் காரில் சென்னை நோக்கி வந்தார். 1½ வயதான பேரன் தர்‌ஷன், மற்றும் 4 பெண்கள், 3 ஆண்கள், மற்றொரு குழந்தை இருந்தனர்.

    காரை காசி ஓட்டி வந்தார். அச்சரப்பாக்கம் அருகே இன்று அதிகாலை கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் காசி, 1½ வயது சிறுவன் தர்‌ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 8 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    காயம் அடைந்த காசி, சிறுவன் தர்‌ஷன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் தர்‌ஷன் பரிதாபமாக இறந்தான். காசிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×