என் மலர்
காஞ்சிபுரம்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபாநாயகர் மீது தி.மு.க. தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடிய அதிகாரம் அவருக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.#Kanimozhi #DMK
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், நேற்று காலை ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் இப்போது 4 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசாரத்துக் காக செல்கிறேன். முந்தைய பிரசாரம் போலவே இதுவும் மக்களிடம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். அதை நாங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, அது வாக்குகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அது போன்ற முயற்சி இந்த தேர்தலிலும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்து உள்ளதே?. அதை நீங்கள் ஆதரிப்பீர்களா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு நடிகர் கமல்ஹாசன், “கொண்டு வரலாம். இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார். #KamalHaasan
அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு கொள்கை, லட்சியம் கொண்டவர்களிடம் முரண்பாடு இருக்காது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கை வழியில் நடப்பதால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எந்த முரண்பாடும் கிடையாது. ஆனால் சிலர் கட்சிக்கும், ஆட்சிக்கும் முழுமையான அளவு விமர்சனங்களை வைக்கும்போது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
கொறடா அளித்த புகாரின்பேரில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து உள்ளார். கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது கோர்ட்டுக்கு சென்று உள்ளனர்.
அ.ம.மு.க., தி.மு.க. இடையே குழப்பம் உள்ளது. ஆனால் எங்களை பொறுத்தவரை எந்தவித குழப்பமும் கிடையாது. அ.தி.மு.க., அரசு, இரட்டை இலை, தொண்டர்கள் இதுதான் எங்களின் ஒரே நிலையாக உள்ளது.
தி.மு.க. சகுனி, சூழ்ச்சி வேலை செய்வது வழக்கம். அ.தி.மு.க.வினர் பாண்டவர்கள் என்பதால் எங்களுக்கு சூழ்ச்சி எதுவும் தெரியாது. அ.ம.மு.க. துரியோதனன். தற்போது துரியோதனன் கும்பலும், சகுனி கும்பலும் சேர்ந்து உள்ளனர். இவர்களால் பாண்டவர்கள் கும்பலை ஒன்றும் செய்ய முடியாது. பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.
வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்தை தன்னுடையதுதான் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று துரைமுருகன் கேட்டு உள்ளார். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையே இல்லை. குப்புற விழுந்து விட்டு மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக உள்ளது. அந்த பணம் துரைமுருகனுக்கு சொந்தமானதுதான்.
23-ந்தேதிக்கு பிறகு அ.ம.மு.க., தி.மு.க. நினைத்தது நடக்காது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.#ADMK #MinisterJayakumar
கொட்டிவாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி மாலதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த நாகராஜ் மனைவி மற்றும் ஜெகனை கண்டித்தார். எனினும் அவர்கள் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். இதனால் நாகராஜுக்கும் ஜெகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாமல்லபுரத்தை அடுத்த தெற்குப் பட்டு கடற்கரை பகுதியில் உள்ள சவுக்குத்தோப்பில் ஜெகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது கள்ளக்காதல் தகராறில் ஜெகன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
கள்ளக்காதலை கைவிடாத ஜெகனை சமாதானம் பேசுவதற்காக நாகராஜ் தனது நண்பரான மாரிமுத்து மூலம் அழைத்து இருக்கிறார். பின்னர் அவர்கள் 3 பேரும் தெற்குப்பட்டு கடற்கரைக்கு வந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த ஜெகனை தனியாக அழைத்து சென்று நாகராஜ் கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கிறார். இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. நாகராஜ் தலை மறைவாகி விட்டார்.
அவர் சொந்த ஊரான ஆந்திராவுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
இது தொடர்பாக நாகராஜின் மனைவி மாலதியிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகையை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வேளாங்கன்னி, அவரது கள்ளக்காதலன் அற்புதராஜ் ஆகியோர் வீட்டு வேலைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது சிறுமியை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலருக்கு பாலியல் விருந்து அளித்துள்ளனர்.
கடந்த வாரம் வீட்டுக்கு வந்த சிறுமி இதுபற்றி தனது தாயிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வேளாங்கன்னியை கைது செய்தனர். அவரது கள்ளக்காதலன் அற்புதராஜ் தலைமறைவாகி விட்டார்.
பின்னர் இந்த வழக்கு காஞ்சீபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வசந்தகுமார், பிரகாஷ், முத்துகல்யாண், மஞ்சுளா ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவான அற்புதராஜை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான அற்புதராஜை உத்திரமேரூர் அருகே போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 2 மாதங்களுக்கு முன்பு ஆட்டோவில் கடத்தப்பட்டார். அந்த சிறுமியை காஞ்சிபுரம் மின்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் மானபங்கப்படுத்தியதாக புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்கள் ராஜா, தேவா இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் அதிமானி பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில், ஆட்டோ டிரைவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜா, தேவா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அபுதாபியில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தனர். அனைவருடைய பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்த சோதனையில் அபுதாபி விமானத்தில் சென்னை திரும்பிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அவர்களில் ஒருவர் தஞ்சை மாவட்டம், அம்மா வட்டம், அம்மா பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (32). இவர் கொலை வழக்கு குற்றவாளி. 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து இருந்தார்.
மற்றொருவர் பெயர் சேக் முகமது (32). தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர். இவர் அடிதடி வழக்கில் தலைமறைவானவர் என்ற தகவலை போலீசார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து 2 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து தஞ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ராபின். ரவுடி. இவர் மீது ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 கொலை வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ராபின் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை சந்தித்து அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வெளியே சென்று இருப்பதை அறிந்த ராபின் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் இளம்பெண்ணை மிரட்டி கடத்தி சென்றார்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் வைத்து அவரை கற்பழித்தார். பின்னர் இளம்பெண்ணை துரைப்பாக்கத்தில் விட்டு விட்டு ராபின் தப்பி ஓடி விட்டார்.
வீட்டுக்கு திரும்பிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மடிப்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இளம்பெண்ணை ராபின் கடத்தி சென்றபோது மாந்தோப்பில் அவரது நண்பர்கள் 4 பேர் இருந்ததாக தெரிகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, “உறவுப் பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி புகாரை வாங்க மறுக்கிறார். மேலும் புகாரை வாபஸ் பெறக்கோரி எங்களை மிரட்டுகிறார்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடி ராபினை கைது செய்ய வேண்டும் என்றனர்.
தாம்பரம்:
மேற்கு தாம்பரத்தில் ஜெருசலேம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்கிற கருப்பசாமி (45). இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். உறவினர் திருமணத்துக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றிருந்தார். இன்று காலை திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ மூலம் விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகத்தை அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சந்தியா (15). இவர் மொரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் பொதுத்தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி அடிக்கடி பெற்றோர் மற்றும் தோழிகளிடம் கூறி வருத்தம் அடைந்தார்.
இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியிருந்த சந்தியா தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்தார்.
தேர்வு முடிவை பார்க்காத சந்தியா இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாணவி சந்தியா தேர்வில் தேர்ச்சி பெற்றாரா? என்று அவரது தோழிகள் இணையதளத்தில் பார்த்தனர்.
இதில் அவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருப்பது தெரிந்தது. தமிழ் -39, ஆங்கிலம்-35, கணிதம்-37, அறிவியல் -45, சமூக அறிவியல் -35 என மொத்தம் 191 மதிப்பெண் பெற்று இருந்தார்.
தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் அதனை பார்க்காமலேயே தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே தோல்வி பயத்தில் சந்தியா தற்கொலை செய்த சம்பவம் அவரது தோழிகள், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SSLC #SSLCResult
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.
போரூர்:
கே.கே. நகர், அம்பேத்கர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வசந்தி (வயது50).மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் தவித்து வந்த வசந்தி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். நேற்று மாலை அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






