என் மலர்
செய்திகள்

மாணவியை கடத்தி மானபங்கம்- ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் கைது
பள்ளி மாணவியை கடத்தி மானபங்கம் செய்த ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 2 மாதங்களுக்கு முன்பு ஆட்டோவில் கடத்தப்பட்டார். அந்த சிறுமியை காஞ்சிபுரம் மின்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் மானபங்கப்படுத்தியதாக புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்கள் ராஜா, தேவா இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் அதிமானி பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில், ஆட்டோ டிரைவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜா, தேவா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Next Story






