என் மலர்
செய்திகள்

மாமல்லபுரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற கணவர்
மாமல்லபுரம் அருகே சமாதானம் பேசுவதாக அழைத்து மனைவியின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கொட்டிவாக்கம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி மாலதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த நாகராஜ் மனைவி மற்றும் ஜெகனை கண்டித்தார். எனினும் அவர்கள் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். இதனால் நாகராஜுக்கும் ஜெகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாமல்லபுரத்தை அடுத்த தெற்குப் பட்டு கடற்கரை பகுதியில் உள்ள சவுக்குத்தோப்பில் ஜெகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது கள்ளக்காதல் தகராறில் ஜெகன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
கள்ளக்காதலை கைவிடாத ஜெகனை சமாதானம் பேசுவதற்காக நாகராஜ் தனது நண்பரான மாரிமுத்து மூலம் அழைத்து இருக்கிறார். பின்னர் அவர்கள் 3 பேரும் தெற்குப்பட்டு கடற்கரைக்கு வந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த ஜெகனை தனியாக அழைத்து சென்று நாகராஜ் கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கிறார். இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. நாகராஜ் தலை மறைவாகி விட்டார்.
அவர் சொந்த ஊரான ஆந்திராவுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
இது தொடர்பாக நாகராஜின் மனைவி மாலதியிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story