search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளத்தூரில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் விழாவில் பங்கேற்பு
    X

    கொளத்தூரில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் விழாவில் பங்கேற்பு

    • கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு பொங்கல்விழா நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கவனித்து வருகிறார்.

    சென்னை:

    கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது.

    கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகேயும், வீனஸ் பார்க் எதிரிலும் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

    இரு நிகழ்ச்சிகளிலும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை வழங்குகிறார்.

    அனிதா அகாடமி சார்பில் பொங்கல் வைக்கும் பெண்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ஸ்டவ் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்நின்று கவனித்து வருகிறார்.

    Next Story
    ×