என் மலர்tooltip icon

    சென்னை

    • கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அண்ணா திமுக தொண்டன்.
    • இந்த இயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார்.

    அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது!

    அஇஅதிமுக-வில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தொண்டர்கள் தான். "நான் மட்டும் தான் எம்ஜிஆர் தொண்டன்" என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா?

    கழகப்பணி எனும் கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அண்ணா திமுக தொண்டன்.

    கழகப்பணி பக்கமே தலை வைக்காமல், தேர்தல் மேகங்கள் சூழும் சமயத்தில் "நானும் அரசியலில் இருக்கிறேன்" என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே உள்ள திரு. சைதை துரைசாமி போன்றோருக்கு, இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி என்ன தெரியும்?

    இன்றும் பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை திரு. சைதை துரைசாமி போன்ற Guest Role அரசியல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இந்த இயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார். "அஇஅதிமுக-வில் இருந்திருக்காவிட்டால் தான் யார்?" என்ற கேள்வியை திரு. சைதை துரைசாமி கண்ணாடியைப் பார்த்து கேட்டுக்கொள்ளட்டும்.

    இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த, நம் இதயதெய்வங்கள் இன்றும் குடியிருக்கும் கோயிலாக நாம் கருதும் நம் தலைமைக் கழகத்தை சூறையாடிய துரோகியின் பெயரை அஇஅதிமுக பெயர் கொண்ட, இரட்டை இலை சின்னம் கொண்ட Letter Head-ல் குறிப்பிடதற்கே திரு. சைதை துரைசாமி வெட்கப்பட வேண்டும்.

    இப்போதும் சரி, எப்போதும் சரி- இந்த இயக்கத்தின் பாதை நேரானது! நம் இலக்கு முடிவானது!

    மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி

    அவர்கள் தலைமையில், மாண்புமிகு அம்மாவின் நூற்றாண்டு கனவு நோக்கி, தமிழ்நாட்டு நலனுக்கான தனிப்பெரும் இயக்கமாக அதிமுக என்றும் பயணிக்கும்...!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாஜக அரசு, தொடர்ந்து அரசியலமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தி வரும் ஒரு மோசமான போக்காக, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
    • ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * ஒன்றிய பா.ஜ.க அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

    * ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து அரசியலமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தி வரும் ஒரு மோசமான போக்காக, வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

    * இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் வழிபாட்டு முறையிலான பண்பாட்டு வாழ்வைப் பின்பற்றும் அனைத்து உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம், இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டங்கள் வழியே அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது.

    * வக்ஃபு வாரியச் சட்டம் என்பது, முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூகப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது. இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டத்தின் முக்கிய அமைப்பு.

    * வக்ஃபு வாரியச் சட்டத்தைச் சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும் நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன?

    * ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது. இஸ்லாமியச் சகோதரர்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கும் உளவியல் தாக்குதலன்றி வேறென்ன?

    * கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளின் துணையோடு. எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்கள், மக்களின் தன்னெழுச்சி மூலம் எதிர்கொண்ட விளைவுகளை வரலாறு முழுக்க நாம் பார்த்திருக்கிறோம்.

    * இஸ்லாமியச் சிறுபான்மையினரின் நலன் காக்கவே இச்சட்டத் திருத்தம், எதிர்க்கட்சியினர் அவர்களைத் தவறாகத் திசைதிருப்புகிறார்கள் என்ற வெற்றுவாதத்தை ஒன்றிய ஆளும் கட்சியினர் முன்வைக்கின்றனர்.

    * ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்வதுபோல, இது இஸ்லாமியர்களின் நலன் காக்கும் சட்டம் என்பது உண்மையானால், அதைத் தாக்கல் செய்யக்கூட, அவர்களிடம் ஏன் இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவர்கூட இல்லை?

    * ஜனநாயக அவையில் அதுபற்றி விவாதிக்கப் போதுமான இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லையே ஏன்?

    * இதுதான், இன்று பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்.

    * இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் ஜனநாயகச் சக்திகளும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கின்றன. ஒருமித்த குரலில் ஒன்றிய அரசின் செயலைக் கண்டிக்கின்றன.

    * இந்த மசோதா பற்றிப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு, வரலாற்றிலேயே முதன்முறையாக வழக்கத்திற்கு மாறாக, இணக்கமான பரிந்துரைகளை மறுத்தது' என்று அக்கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களே குற்றம்சாட்டி உள்ளனர். இது பா.ஜ.க. அரசின் கொடுங்கோல் அதிகாரமன்றி வேறென்ன?

    * தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகமும் தனது பொதுக் குழுவில் அதே கருத்தை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

    * நம் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக விழுமியங்களையும் மறுத்து, தனது பெரும்பான்மைவாத ஆதிக்கத்தின் துணையோடு, இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிரான அரசியலைக் கையில் எடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு. தமிழக வெற்றிக் கழகத்தின் வன்மையான கண்டனங்கள்.

    * நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகக் குரல்களுக்கும் செவிமடுக்கும் விதமாக, ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தச் சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு இதனைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்ஃபு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும்.

    இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

    • சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் கடிதம்.
    • தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும்.

    கச்சத்தீவை மீட்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் மீட்டுக் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு தொடர்பாக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அவர்," தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.
    • தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

    தர்பூசணி பழங்களில் ரசாயனங்கள் கலப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்பாதீர்கள் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.

    நல்ல தர்பூசணிக்கும் ரசாயன நிறம் கலந்த தர்பூசணிக்கும் உள்ள வேறுபாடு குறித்து அவர் விளக்கினார்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் கூறியிருப்பதாவது:-

    தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை. தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

    சென்னையில் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தி செயற்கையாக நிறமூட்டப்படுவதாக எங்கும் கண்டறியப்படவில்லை.

    சென்னையின் ஒரு சில இடங்களில் கெட்டுப் போன பழங்கள் விற்கப்படுவது மட்டுமே ஆய்வில் கண்டறியப்பட்டது. எல்லா இடங்களிலும் தர்பூசணிகளில் நிறமூட்டி பயன்படுத்துவதாக கருதுவது தவறு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
    • தர்பூசணி விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அர்த்தமற்ற வதந்திகளால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது அதனால் தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோடைக்காலத்தில் வெப்பத்தின் கடுமையைப் போக்கவும், உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கவும் சாப்பிடப்படும் தர்பூசணி பழங்கள் குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

    அதனால், தர்பூசணி விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தர்பூசணி பழங்கள் இயல்பாக இளஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் என்றும், இராசாயனம் கலந்த தர்பூசணி தான் அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட விழிப்புணர்வு காணொலி தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து தர்பூசணி பழங்கங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால் அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டது. சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப் பட்ட தர்பூசணி பழங்களை இப்போது ரூ.3 ஆயிரத்திற்குக் கூட வாங்குவதற்கு எவரும் முன்வருவதில்லை.

    தமிழ்நாடு முழுவதும் 80 ஆயிரத்திற்கும் கூடுதலான பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் இன்னும் அறுவடை செய்யப்படவில்லை.

    தர்பூசணி பழங்கள் குறித்த மக்களின் அச்சம் விலகி, அதன் விற்பனை அதிகரிக்காத பட்சத்தில் அனைத்து உழவர்களும் தாங்க முடியாத இழப்பை சந்திக்க நேரிடும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

    தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யும் போது மட்டும் தான் இளஞ்சிவப்பாக இருக்கும். அறுவடை செய்யப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு அடர்சிவப்பாக மாறிவிடும். அறுவடை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் சந்தைக்கு வருவதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகி விடும்.

    அதன்பின் பொதுமக்கள் தர்பூசணியை வீட்டுக்கு வாங்கி வந்து சாப்பிடும் போது அடர்சிவப்பாகத் தான் இருக்கும். இது தான் தர்பூசணியின் இயல்பு. இதில் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.

    ஆனால், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அடர்சிவப்பு நிறத்தில் உள்ள தர்பூசணி பழங்கள் அனைத்துமே இரசாயனம் கலக்கப்பட்டவை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டு விட்டது. அதனால், தர்பூசணி வணிகம் குறைந்து விட்டது. இந்த எண்ணத்தைப் போக்க ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

    உழவர்களின் தர்பூசணித் தோட்டங்களுக்கு சென்ற தோட்டக்கலை அதிகாரிகள், அங்குள்ள பழங்களை ஆய்வு செய்து அவை தரமானவை என்றும், அடர்சிவப்பு நிறத்தில் இருந்தாலும் அச்சமின்றி உண்ணலாம் என்றும் விளக்கமளித்துள்ளனர்.

    டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் தர்ப்பூசணி பழங்களில் நிறமிகளை ஊசி மூலம் செலுத்துவது சாத்தியமற்றது என்று கூறியுள்ளனர்.

    தொடக்கத்தில் காணொலி வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியும், "விவசாய நிலங்களில் 99.9% தவறு நடப்பதில்லை. யாரோ சிலர் மட்டும் தான் தவறு செய்துள்ளனர். இரசாயனம் கலந்த தர்பூசணி எங்கும் விற்பனை செய்யப்படவில்லை" என்று விளக்கம் அளித்தும் கூட மக்களிடம் ஏற்பட்ட அச்சம் விலகவில்லை.

    எனவே, தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில், தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக அரசு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் தர்பூசணி உழவர்களை பேரிழப்பிலிருந்து காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
    • பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் அவரை சந்திக்க இபிஎஸ்க்கு அனுமதி.

    தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரும் 7ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கான தலைவர் நியமனம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்ணாமலையுடன் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியவரும் சந்திக்க உள்ளார்.

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே, பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் அவரை சந்திக்க இபிஎஸ்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.
    • தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.

    மருதமலை கோவிலில் வெள்ளிவேல் திருட்டு நடக்கவில்லை என்றும் அடிவாரத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபத்தில் திருட்டு நடந்துள்ளது என்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை மாவட்டம், மருதமலை. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐள குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன.

    கோவை மாவட்டம், பேரூர் வட்டம் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.

    இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் ஆகும். இதன் நிர்வாகியாக குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.

    மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.

    மேலும், இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என கோவை மண்டல இணை ஆணையர் பி.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் புயல் கண்காணிப்பிற்கு புதிய ரேடார்கள் நிறுவப்பட உள்ளது.
    • வானிலை முன்னெச்சரிக்கை துல்லியத்தை மேம்படுத்த ஏற்காடு, ராமநாதபுரத்தில் டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும்.

    தமிழ்நாட்டில் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் புயல் கண்காணிப்பிற்கு புதிய ரேடார்கள் நிறுவப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வானிலை முன்னெச்சரிக்கை துல்லியத்தை மேம்படுத்த ஏற்காடு, ராமநாதபுரத்தில் டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும். ரூ.56 கோடி மதிப்பில் சி பேண்டு டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக அதிநவீன ரேடார்கள் நிறுவினால் தமிழகத்தின் தென்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து முழுமையாக தடுக்க முடியும்.

    கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நிலவும் பருவ நிலைகள் ஓரளவுக்கு கண்காணிக்கப்படுகிறது. ஆனாலும் பல பகுதிகளை இதன் மூலம் கண்காணிப்பதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனை சரிசெய்யும் வகையிலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவும் பருவநிலைகளை முன்கூட்டியே கண்காணிக்க வசதியாகவும் 2 புதிய ரேடார்கள் நிறுவப்படுகின்றன.

    இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவ நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முடியும். 

    • அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?
    • வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடிகர் பிரபு தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" பிரபு தரப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

    இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
    • தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் ரூ.20 கோடியில் விரிவுப்படுத்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

    இன்று கிராமப்புற பொருளாதாரம் சிறப்பாக இருப்பதற்கு கால்நடை வளர்ப்பே முக்கிய காரணமாக உள்ளது. 3 பசுமாடுகளை வளர்த்தால் ஒரு குடும்பமே நல்ல பயனை பெற முடியும். ஆடுகள் வளர்ப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் தேவைக்காக உடனடியாக அவைகளை விற்று தங்களது பண தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.

    இதனை கருத்தில் கொண்டு ஆடுகள், மாடுகள், கோழிகளை வளர்ப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் சினையுற்ற கறவை பசுக்களுக்கு ரூ.6.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்படும். சென்னை அடையாறில் உள்ள செல்லப் பிராணிகள் சிகிச்சை மையம் ரூ.5 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    செல்லப் பிராணிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவதற்கு வசதியாக சென்னை மற்றும் கோவையில் ரூ.5 கோடியில் செல்லப்பிராணி பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

    தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் ரூ.20 கோடியில் விரிவுப்படுத்தப்படும்.

    கால்நடை விவசாயிகள், கால்நடை வளர்ப்பு குறித்த பல்வேறு நடைமுறைகளை தெரிந்து கொள்ளும் முறையில் அவர்கள் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்யப்படும்.

    கிராமப்புறங்களில் நிலமற்ற தினக்கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், நாட்டின கோழி குஞ்சு வழங்கும் திட்டம்50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் 16 மீனவ கிராமங்கள் ரூ.32 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தரமான மீன் மற்றும் மீன் உணவு பொருட்களை நியாயமான முறையில் வழங்குவதற்கு கயல் திட்டம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.
    • அனைவரையும் உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய கடந்த 4 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழ்நாடு முழுவதும் தற்போது காலியாக உள்ள 2500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு தம்முடைய பிடிவாதத்தை இனியேனும் கைவிட்டு, செவிலியர் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எவ்வித நிபந்தனையுமின்றி அவர்கள் அனைவரையும் உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும்.
    • வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வாய்மொழியாக அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக 2 நீதிபதிகளும் கூறினர். இதனால், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி, டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வக்கீலாக கே.ராஜா உள்ளார். இவர் நீதிபதி கே.ராஜசேகரின் இளைய சகோதரர் என்பதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றலாம்' என்றார்.

    ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதி பதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல் ஆஜராகி, ''டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வக்கீலாக, நீதிபதி கே.ராஜசேகரின் தம்பி உள்ளதால், இந்த வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்க மறுத்த நீதி பதிகள், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் முறையிடலாம்' என்று கூறினர்.

    ×