என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க அசோக் கெலாட் மீண்டும் வலியுறுத்தல்
- நாட்டின் முன்பு நிறைய சவால்கள் உள்ளன.
- ராகுல்காந்தி தலைவர் ஆனால் சவால்களை சந்திப்பது எளிதாக இருக்கும்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்காக வந்திருந்த ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் என்று ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் விரும்புகிறார்கள். அவர் தலைவர் ஆனால்தான் காங்கிரஸ் ஒற்றுமையாகவும், வலிமையாகவும் இருக்கும். நாட்டின் முன்பு நிறைய சவால்கள் உள்ளன. ராகுல்காந்தி தலைவர் ஆனால், அந்த சவால்களை சந்திப்பது எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story