என் மலர்
அரியலூர்
செந்துறையில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட ஆலத்தியூர் ஊராட்சி தெத்தேரி கிராமம் வெள்ளாற்றில் டிப்பர் லாரிகளில் மணல் திருடப்படுவதாக தளவாய் கிராமம் வி.ஏ.ஓ. செல்வக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வி.ஏ.ஓ. செல்வகுமார், தளவாய் காவல் துறையினர் உதவியுடன் விரைந்து சென்று பார்த்தபோது சிலர் வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர். அந்த லாரி அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கருப்பையா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதுகுறித்து விஏஓ. செல்வகுமார் புகாரின் பேரில் கருப்பையா மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரசிங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
வாரியங்காவல்:
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் வங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. மேலும் அப்பகுதி வழியாக மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை அகற்றி விடுவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் கடந்த 4-ந் தேதி அப்பகுதியில் ஒருவரின் மோட்டார் கொட்டகையில் டாஸ்மாக் கடை வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வருதாகவும், இதனால் அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், களையெடுக்க வயலுக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் வருகிற 10-ந் தேதியன்று காலை 10 மணி அளவில் பாப்பாகுடி சாலையில் மறியலில் ஈடுபடுவோம் என்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம், மீன்சுருட்டி போலீஸ் நிலையம், பாப்பாகுடி மின்சார அலுவலகம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி துண்டு பிரசுரமும் வழங்கினர்.

மீன்சுருட்டி, பாடாலூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் படுகாயமடைந்தார். மேலும் மின்னல் தாக்கியதில் பசுமாடு ஒன்றும் இறந்தது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள குருவாலப்பர் கோவில் கிராமம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் தனது குடிசை வீட்டில் வழக்கம் போல் நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இரவு சுமார் 1 மணியளவில் வீட்டின் சுவர் இடிந்து வீட்டில் உறங்கி கொண்டு இருந்த நாகப்பன் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த நாகப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) காமராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நாகப்பனுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள பாடாலூர், செட்டி குளம், நக்கசேலம், தேனூர், கொளக்காநத்தம், காரை, இரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று முன் தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது இரூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்த பசுமாடு மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் போலீஸ்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு செய்தனர்.
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ்துறை சார்பில் வட கிழக்கு பருவமழையையொட்டி மழை வெள்ளம் போன்ற பேரிடரை எதிர்கொள்ளும் பொருட்டு பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகாவுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்கால பேரிடர் மீட்பு பணி பற்றி பயிற்சி பெற்ற போலீசார் உரிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய போலீஸ் கட்டுப்பாட்டுஅறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை உரிய இடத்தில் தங்க வைப்பது, அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவது உள்ளிட்டவற்றை போலீசார் மேற்கொள்வர். மேலும் மழைவெள்ள இடர்பாடுகள் பற்றி தகவல் தெரிவிக்க 04328- 224910 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தெரிவித்தார். மழைவெள்ளம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்ட திருமாந்துறை, பிரம்மதேசம், எளம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கக்கூடியவையாக 29 கிராமங்கள் கண்டறியப்பட்டு தொடர்ந்து போலீஸ்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிக்காக 18 போலீசார் கொண்ட 2 குழுக்கள் போதுமான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர். மழை வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களை தங்க வைக்க 29 பாதுகாப்பு மையங்கள், அவர்களை அழைத்து செல்ல போலீஸ் வாகனங்கள் உள்ளிட்டவை தயாராக உள்ளன. பேரிடர் சமயத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வழிக்காவல் வாகனம் தயாராக உள்ளது. மழைவெள்ளம் குறித்து தகவல் தெரிவிக்க போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 04329-222106, 9498100705 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் தெரிவித்தார். போலீஸ்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்து தக்க அறிவுரை வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு கன மழை பெய்ததில் 2 வீடுகள் இடிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு கன மழை பெய்தது. இன்று காலை லேசான தூரலுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. இந்த மழையின் காரணமாக செந்துறை அருகேயுள்ள பெரியகுறிஞ்சியை சேர்ந்த மலர்கொடி என்பவரின் குடிசை வீடும், சொக்கநாத புரத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
அரியலூர்-25, ஜெயங்கொண்டம்-36, திருமானூர்-14, செந்துறை-3.
தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தான் டெங்கு மற்றும் மழை வெள்ள பாதிப்புக்கு பல உயிர்கள் பலியாகியுள்ளன என்று அரியலூரில் ஜி.கே.வாசன் பேசினார்.
அரியலூர்:
த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் அரியலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் அதிகளவு மழை பெய்து வருகிறது. ஆனால் முறையான வடிகால் வசதியில்லாததால் சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கு இடமும், உணவு வசதியும் செய்து தரவேண்டும். டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தான் டெங்கு மற்றும் மழை வெள்ள பாதிப்புக்கு பல உயிர்கள் பலியாகியுள்ளன. சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு தற்போது அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல. சாக்கடை அடைப்பு மற்றும் சுகாதார பாதிப்புக்கு முக்கிய காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும்.
வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களை முறையாக தூர்வாராததால் தற்போது பெய்து வரும் மழையில் டெல்டா பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டை பச்சரிசி சாதம் படைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த, உலக புராதன சின்னங்களில் ஒன்றான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கலை நயத்துடனும் மிக பிரம்மாண்டமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர். கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் சுற்றளவு 62 அடி, உயரம் 13½ அடி ஆகும். இந்த சிவலிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்ற சிறப்பும் உண்டு. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 32 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர்.

சமைக்கப்பட்ட சாதம் குவித்து வைக்கப்பட்டு இருந்த காட்சி.
அதன்படி நேற்று 33-வது ஆண்டாக இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை பச்சரிசியை நீராவி அடுப்புகளில் சமைக்கப்பட்டது. இந்த பணி காலையில் தொடங்கி மாலை வரை நடந்தது.
இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்களால் அலகரிக்கப்பட்டு, பிரம்மாண்ட பூமாலையும் அணிவிக்கப்பட்டது.

நீராவி அடுப்புகளில் சாதம் சமைத்த போது எடுத்த படம்.
இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். பக்தர்களுக்கு வழங்கியது போக மீதம் உள்ள சாதம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, உதவி ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர் பரிமாணம், உடையார் பாளையம் கோட்டாட்சியர் டினா குமாரி, ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையும், காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் மற்றும் அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து இருந்தனர்.

ஜெயங்கொண்டம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் வேலுசாமி மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், டெங்குகாய்ச்சல் அறிகுறிகள், டெங்குவை தடுக்கும் முறைகள், டெங்கு கொசுப்புழு உருவாகும் விதம், வீட்டில் குடிநீரையும் உபயோகபடுத்தும் அனைத்து தண்ணீரையும் பாதுகாப்புடன் மூடிவைத்து பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்.
மாணவ, மாணவிகள் இதனை பொதுமக்களுக்கும் முக்கியமாக பெற்றோர்களிடத்திலும் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி பேசினார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் முகமுது நிசார், மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சவுந்திரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு இன்று 2,500 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகந்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சோழ மன்னனான முதலாம் ராஜேந்திர சோழன் 1000 வருடத்திற்கு முன்பு கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக இந்த கோவில் கட்டப்பட்டது.
சோழர் சிற்பங்களுடன் தஞ்சை பெரிய கோவிலின் பிரதிபலிப்பாக, அறுபது அடி சுற்றளவும் 13½ அடி உயர மும் மிக பிரமாண்டமாக பிரகந்நாயகி உடனுறை மூலவர் பிரகதீஸ்வரருடன் கோவிலை நிறுவினார்.
அனைத்து உற்சவங்களுடன் ஐப்பசி பவுர்ணமி அன்று அன்னாபிஷேகமும் நடைபெற்று வருகிறது. பிற்காலத்தில் தடைபட்ட நிலையில், தற்போது ஐப்பசி பவுர்ணமி அன்று சிவஸ்தலத்திற்கு சென்று வழிபடுவதோடு அன்னாபிஷேகத்தை காண்பது புண்ணியமாக கருதப்படுகிறது.
அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாற்றப்பட்டு, ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று, சிவஸ்வரூபமாக மாறுவதால். அன்று அன்னாபிஷேகத்தை தரிசிப்பது கோடி சிவஸ்தலத்திற்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எனவே கடந்த 32 வருடத்திற்கு முன் காஞ்சி மகா பெரியவர் திரும்பவும் அன்னாபிஷேகத்தை தொடங்கினார். அவரின் ஆசைப்படி, காஞ்சி மடத்து பக்தர்களால் 33-வது ஆண்டாக இந்த வருடம் அன்னாபிஷேகம் நடக்கிறது.
நேற்று முன்தினம் கணக்க விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பிரகதீஸ்வரர், பிரகந்நாயகி, மகிஷாசுரமர்த்தினி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் சந்தனாதி தைலம், நெல்லி முல்லி பொடி, அரிசி மாவு, திரவிய பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், எலுமிச்சை பழம், இளநீர், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர், கங்கை தீர்த்தம் உட்பட 48 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடந்தது.
வில்வ இலை உட்பட 11 வகையான இலைகள், 21 வகை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் 100 சிப்பம் சுமார் 2,500 கிலோ பச்சரிசியால் சாதம் சமைக்கத் தொடங்கினர். இன்று மாலை 6 மணியளவில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம், செய்து மகா தீபாராதனை நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து நாளை மறுதினம் பிரகதீஸ்வரருக்கு ருத்ரா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையும், காஞ்சி சங்கர மட பக்தர்கள் சார்பில் கமிட்டி குழுவும் செய்துள்ளது.

அரியலூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் அலமேலு (வயது60) அவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்தவழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முகவரி கேட்பது போல அவரிடம் விசாரித்து அவரின் கவனத்தை திருப்பி அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து அங்கிருந்து தப்பித்து சென்றார்.
இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இதனை அடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜெயங்கொண்டம் நகராட்சி 20-வது வார்டு செங்குந்தபுரம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தேங்கவிடாமலும், தண்ணீர் தொட்டியை சுத்தமாகவும் பொதுமக்கள் பராமரிக்கிறார்களா என்பதை வீடு, வீடாகச் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், செங்குந்தபுரம் ஊராட்சியில் பொதுக் கிணறை சுத்தப்படுத்தி கிணற்றின் மேல்பகுதியில் சிமெண்ட் கட்டை கட்டி தண்ணீர் இறைக்கும் உருளை அமைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையினை பார்வையிட்டு தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்டவர்களை கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், நகராட்சி நிர்வாகத்தினர் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
செங்குந்தபுரம் அங்கன் வாடி மையத்தில் ஆசிரியர்கள், குழந்தைகள், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நில வேம்பு கசாயம் வழங்கினார்.

அரியலூர் அருகே பள்ளி மாணவியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த அரசு பள்ளி தலைமையாசிரியரை போலீசார் கைது செய்தனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே காரை பாக்கத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு திருமானூர் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜான் அலெக்ஸ் (வயது 54) என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் காரைபாக்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த மாணவி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது தலைமையாசிரியர் ஜான் அலெக்ஸ், மாணவியை அழைத்து 2 முறை மாணவியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
மேலும் மதியம் உணவு இடைவேளை நேரத்திலும், மாணவர்களின் வருகை பதிவேடை தலைமையாசிரியர் அறைக்கு எடுத்து சென்ற போதும் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
பின்னர் மறுநாள் அந்த மாணவி பள்ளிக்கு சென்ற போது அப்போதும் முத்தம் கொடுக்க ஜான் அலெக்ஸ் முயன்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி, பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டார்.
இடையிலேயே பள்ளியில் இருந்து வந்து விட்டதால் அதற்கான காரணம் குறித்து மாணவியிடம் அவரது தாய் கேட்டுள்ளார். அப்போது அழுது கொண்டே நடந்த சம்பவத்தை மாணவி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து உடனடியாக திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமையாசிரியர் ஜான் அலெக்சை கைது செய்தார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது கல்வி அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.