search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு விழிப்புணர்வு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும்.
    • நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வாலிபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 15 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த மையத்தில் உள்ள அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்ற 2½ வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து தனது மழலை குரலில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு பரவுகிறது எனவும், கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும். நமது வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    உடைந்து போன குடங்கள், டயர்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை வீட்டை சுற்றி வைக்கக்கூடாது. நாம் குடிக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என சிறுவன் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    மேலும் இதேபோல் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என செய்முறை விளக்கத்தோடு பேசும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது என்று கண்காட்சி நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகளவு உற்பத்தி ஆகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக இன்று திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு எவ்வாறு உருவாகிறது அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் மற்றும் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த முகாமில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேயர் இளமதி பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்பொழுது ஒருவருக்கு கூட டெங்கு காய்ச்சல் கிடையாது.

    மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தான் வீட்டில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பினை பெற்றோர்களுக்கு எடுத்து கூறி முறையாக செயல் படுத்துவார்கள். அதனால் தான் மாணவர்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைய மாணவர்கள் பங்கு முக்கியமானது. நாட்டை பாதுகாப்பது மாணவர்களின் கடமை போல், டெங்கு தடுப்பு விழிப்புணர்விலும் மாணவர்களின் கடமை இன்றியமையானது என பேசினார் .

    இதில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஜான் பீட்டர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • வீடுகளில் பயன்படாமல் கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பயிற்சி நிலைய முதல்வர் வாளையானந்தம் தலைமை தாங்கினார். கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நெப்போலியன் முன்னிலை வகித்தார். இதில், டெங்கு கொசுக்கள் உருவாகும் விதம், டெங்குவால் ஏற்படும் ஆபத்துக்கள், காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் பயன்படாமல் கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள், ஆசிரியர்கள், கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகர சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துதுறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தை எதிர் கொள்ள தயார்நிலை யில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கடலோரப்பகுதிகளில் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்டறிந்து உடன் நட வடிக்கை எடுக்கவும், மேலும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தான நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து தாசில் தார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி., மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது. பழுதான நிலையில் உள்ள அபாயகர மான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சம்மந்தப் பட்ட அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டது. 15 தினங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய வற்றில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை குளோரினேசன் செய்ய அதிகாரிகளுக்கு அறி வுறுத்தட்டது.

    மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது தொட்ட நிலையில் காணப்பட்டால் மின்சார வாரியம் மூலம் மரம் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்றவும், மின்பழுது தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் 9498794987 என்ற தொலைபேசி எண் செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு தெரிவிக்க மின்சாரவாரிய அலுவ லருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் வீடு மற்றும் அலுவலகங்களின் மேல் பகுதியில் குப்பைகள் மற்றும் மரத்தின் இலைகள் காணப் பட்டால் அவற்றை அப்புறப் படுத்தி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு மழைக் காலங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிளாஸ்டிக் பாட்டில், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் இவற்றில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல், சளி இது போன்ற அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை மேற் கொள்ளுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. கால்நடை களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகவும் மற்றும் கால்நடைகள் இறந்தால் அவற்றை உட னடியாக அப்புறப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை வெள்ள பாதிப்பு சேதங்கள் தொடர் பான 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப் பாட்டு அறை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

    பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மேற்படி பகுதிகளுக்கு அழைத்துச்செல்லாமல் தற்காத்துக்கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரா யணன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ஜோதிபாசு, தோட்டக்லைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×