என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள்: கலெக்டர் ஆய்வு
    X

    ஜெயங்கொண்டம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள்: கலெக்டர் ஆய்வு

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட  கலெக்டர் லட்சுமி பிரியா  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஜெயங்கொண்டம் நகராட்சி 20-வது வார்டு செங்குந்தபுரம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தேங்கவிடாமலும், தண்ணீர் தொட்டியை சுத்தமாகவும் பொதுமக்கள் பராமரிக்கிறார்களா என்பதை வீடு, வீடாகச் சென்று நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

    மேலும், செங்குந்தபுரம் ஊராட்சியில் பொதுக் கிணறை சுத்தப்படுத்தி கிணற்றின் மேல்பகுதியில் சிமெண்ட் கட்டை கட்டி தண்ணீர் இறைக்கும் உருளை அமைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி அலுவலர்களுக்கு  கலெக்டர் உத்தரவிட்டார்.

    பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையினை பார்வையிட்டு தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்டவர்களை  கலெக்டர்  அறிவுறுத்தினார். மேலும், நகராட்சி நிர்வாகத்தினர் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    செங்குந்தபுரம் அங்கன் வாடி மையத்தில் ஆசிரியர்கள், குழந்தைகள், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நில வேம்பு கசாயம் வழங்கினார்.
    Next Story
    ×